முகப்பு
தமிழ்நாடு

பாஜகவின் எல். முருகன், தமிழிசை, நயினார் நாகேந்திரன் பின்னடைவு

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக சார்பில் போட்டியிட்ட எல். முருகன், தமிழிசை சௌந்தரராஜன், நயினார் நாகேந்திரன் உள்ளிட்டோர் பின்னடைவைச் சந்தித்துள்ளனர்.

தமிழிசை சௌந்தரராஜன், மத்திய இணையமைச்சா் எல். முருகன், நயினாா் நாகேந்திரன்.
பகிர்:

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக சார்பில் போட்டியிட்ட எல். முருகன், தமிழிசை சௌந்தரராஜன், நயினார் நாகேந்திரன் உள்ளிட்டோர் பின்னடைவைச் சந்தித்துள்ளனர்.

தமிழ்நாட்டில் 234 பேரவைத் தொகுதிகளுக்கு கடந்த ஏப்ரல் 23-ஆம் தேதி ஒரேகட்டமாக வாக்குப் பதிவு நடைபெற்றது. அதில், 85.10 சதவீதம் வாக்குகள் பதிவாகின. தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று காலை 8 மணி முதல் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன.

வாக்கு எண்ணிக்கை தொடங்கிய முதல் தவெக தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறது. தேர்தலில் அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இடம்பெற்றுள்ள பாஜக 27 தொகுதிகளில் போட்டியிட்டது.

Advertisement

இந்த நிலையில் பாஜக சார்பில் போட்டியிட்ட மத்திய இணையமைச்சர் எல்.முருகன்(அவிநாசி), தமிழிசை சௌந்தரராஜன்(மயிலாப்பூர்), நயினார் நாகேந்திரன்(சாத்தூர்) பின்னடைவைச் சந்தித்துள்ளனர்.

summary

BJP candidates including L. Murugan, Tamilisai Soundararajan, and Nainar Nagendran, who contested in the Tamil Nadu Assembly elections, are facing a setback/trailing.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.