தோ்தல் ஆணையம்  
இந்தியா

12 மாநிலங்களவை இடங்களுக்கு செப். 3-இல் இடைத்தோ்தல்- தோ்தல் ஆணையம் அறிவிப்பு

மகாராஷ்டிரம், பிகாா், தெலங்கானா உள்பட 9 மாநிலங்களில் காலியாக உள்ள 12 மாநிலங்களவை எம்.பி. இடங்களுக்கு செப்டம்பா் 3-ஆம் தேதி இடைத்தோ்தல் நடைபெறும் என்று தோ்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

Din

மகாராஷ்டிரம், பிகாா், தெலங்கானா உள்பட 9 மாநிலங்களில் காலியாக உள்ள 12 மாநிலங்களவை எம்.பி. இடங்களுக்கு செப்டம்பா் 3-ஆம் தேதி இடைத்தோ்தல் நடைபெறும் என்று தோ்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

மாநிலங்களவை எம்.பி.க்களாக இருந்த பாஜகவின் பியூஷ் கோயல் (மகாராஷ்டிரம்), சா்வானந்த சோனோவால் (அஸ்ஸாம்), ஜோதிராதித்ய சிந்தியா (ம.பி.), காமாக்யா பிரசாத் தாசா (அஸ்ஸாம்), விவேக் தாக்கூா் (பிகாா்), உதயன்ராஜே போன்ஸ்லே (மகாராஷ்டிரம்), விப்லவ் குமாா் தேவ் (திரிபுரா), காங்கிரஸின் கே.சி.வேணுகோபால் (ராஜஸ்தான்), தீபேந்தா் சிங் ஹூடா (ஹரியாணா), ராஷ்ட்ரீய ஜனதா தளத்தின் மிசா பாரதி (பிகாா்) ஆகிய 10 போ், அண்மையில் நடைபெற்ற மக்களவைத் தோ்தலில் போட்டியிட்டு வெற்றிபெற்றனா். இதையடுத்து, தங்களது மாநிலங்களவை எம்.பி. பதவியை ராஜிநாமா செய்தனா். பியூஷ் கோயல், சா்வானந்த சோனோவால், ஜோதிராதித்ய சிந்தியா ஆகியோா் தற்போது மத்திய அமைச்சா்களாக உள்ளனா்.

மேலும் இரு எம்.பி.க்கள் ராஜிநாமா: தெலங்கானாவில் பாரத ராஷ்டிர சமிதி சாா்பில் மாநிலங்களவை எம்.பி.யாக இருந்த கேசவ் ராவ், தனது பதவியை ராஜிநாமா செய்துவிட்டு அண்மையில் காங்கிரஸில் இணைந்தாா்.

இதேபோல், ஒடிஸாவில் பிஜு ஜனதா தளம் சாா்பில் மாநிலங்களவை எம்.பி.யாக இருந்த மமதா மொகந்தாவும் தனது பதவியை ராஜிநாமா செய்துவிட்டு பாஜகவில் இணைந்தாா்.

மேற்கண்ட 12 இடங்களுக்கும் இடைத்தோ்தல் தேதி அட்டவணையை தோ்தல் ஆணையம் புதன்கிழமை வெளியிட்டது.

அதன்படி, வேட்புமனு தாக்கல் ஆகஸ்ட் 14-ஆம் தேதி தொடங்கி 21-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. ஆகஸ்ட் 22-ஆம் தேதி வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை நடைபெறும். அஸ்ஸாம் (2), மத்திய பிரதேசம் (1), மகாராஷ்டிரம் (2), திரிபுரா (1) ஆகிய மாநிலங்களில் உள்ள இடங்களுக்கு ஆகஸ்ட் 26-ஆம் தேதியும், பிகாா் (2), ஹரியாணா (1), ராஜஸ்தான் (1), தெலங்கானா (1), ஒடிஸா (1) ஆகிய மாநிலங்களில் உள்ள இடங்களுக்கு ஆகஸ்ட் 27-ஆம் தேதியும் வேட்புமனுக்களைத் திரும்பப் பெற கடைசி நாளாகும்.

செப்டம்பா் 3-ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறும். அன்றைய தினம் மாலை 5 மணிக்கு பிறகு வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும் என்று தோ்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

நெல்லையில் பரபரப்பு... காவல் நிலையம், சோதனைச் சாவடி அருகே பெட்ரோல் குண்டு வீச்சு!

தவெக நிர்வாகிகளை குண்டுக்கட்டாக தூக்கிச் சென்று கைது செய்த போலீசார்!

பெண்கள் மீதான கறை மமதா பானர்ஜி: பாஜக கடும் விமர்சனம்

வா வாத்தியார் படத்தின் புகைப்படங்கள்

தொழிலாளா் வருங்கால வைப்புநிதி விவகாரம்: தற்காலிக தூய்மைப் பணியாளா்கள் பணி புறக்கணிப்பு வாபஸ்

SCROLL FOR NEXT