கரண் பூஷண் சிங்(கோப்புப்படம்) ANI
இந்தியா

வினேஷ் போகத் தகுதி நீக்கம் குறித்து பிரிஜ் பூஷண் மகன் கருத்து

கூடுதல் எடை காரணமாக இறுதிப் போட்டியில் பங்கேற்க வினேஷ் போகத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

DIN

வினேஷ் போகத் தகுதி நீக்கம் குறித்து பாஜக எம்பியும் இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் முன்னாள் தலைவர் பிரிஜ் பூஷணின் மகனுமான கரண் பூஷண் சிங் கருத்து தெரிவித்துள்ளார்.

ஒலிம்பிக் மல்யுத்தப் போட்டியின் இறுதிப் போட்டியில் பங்கேற்கவிருந்த வினேஷ் போகத், 100 கிராம் கூடுதல் எடையுடன் இருப்பதாகக் கூறி, ஒலிம்பிக் அமைப்பு அவரை தகுதி நீக்கம் செய்திருப்பதாக இந்திய ஒலிம்பிக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளன.

இதுகுறித்து நாடாளுமன்ற வளாகத்தில் செய்தியாளர்களுடன் பேசிய கரண் பூஷண், இது நாட்டுக்கான இழப்பு, ஒலிம்பிக் கூட்டமைப்பு இதனை கவனத்தில் எடுத்துக் கொண்டு என்ன செய்ய வேண்டும் என்பதை பார்க்க வேண்டும் எனத் தெரிவித்தார்.

ஒலிம்பிக்கில் தகுதி நீக்கம் செய்யப்பட்ட வினேஷ் போகத்துக்கு பிரதமர் நரேந்திர மோடி ஆறுதல் தெரிவித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டதுடன், இந்திய ஒலிம்பிக் கூட்டமைப்பின் தலைவர் பி.டி.உஷாவை தொடர்பு கொண்டு அடுத்த கட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள அறிவுறுத்தியுள்ளார்.

இந்தியாவுக்காக காமன்வெல்த், உலக சாம்பியன்ஷிப், ஆசிய சாம்பியன்ஷிப், ஆசிய போட்டிகளில் பதக்கங்களை வென்றுள்ள வினேஷ் போகத், இந்திய மல்யுத்த சம்மேளன தலைவராக இருந்த பிரிஜ் பூஷண் சிங் சரண், வீராங்கனைகளை பாலியல் துன்புறுத்தல் செய்ததாக குற்றச்சாட்டை முன்வைத்து கடந்தாண்டு பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

‘டியூட்’ படப் பாடல்களை நீக்கக் கோரி இளையராஜா வழக்கு: தீா்ப்புக்காக ஒத்திவைப்பு

சிவா பிள்ளையல்ல... தமிழ்ப் பிள்ளை!

வளர்ச்சியடைந்த பாரதமே இலக்கு!

இந்தியாவின் உயிர்த்துடிப்பு!

கூடுதல் தகவலுடன் கடைக்காரா் கொலை வழக்கில் 5 சிறுவா்கள் உள்பட 6 போ் கைது

SCROLL FOR NEXT