அகிலேஷ் யாதவ் 
இந்தியா

ரியல் எஸ்டேட் நிறுவனம் போல் செயல்படுகிறது பாஜக: அகிலேஷ் குற்றச்சாட்டு!

பாஜக தன்னை "பாரதிய ஜமீன் கட்சி" என்று பெயர் மாற்றிக்கொள்ளவும்.

PTI

பாஜக ரியல் எஸ்டேட் நிறுவனம் போல் செயல்படுவதாக சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் குற்றம் சாட்டியுள்ளார்.

இதுதொடர்பாக அவரின் எக்ஸ் பதிவில்,

பாஜ உறுப்பினர்களின் நலனுக்காக நிலத்தை விற்கத் திருத்த மசோதா ஒரு சாக்குப்போக்கு என்றும் பாஜக ரியல் எஸ்டேட் நிறுவனம் போல் செயல்படுகிறது என்றும் அவர் கூறியுள்ளார்.

பாஜக தன்னை "பாரதிய ஜமீன் கட்சி" என்று பெயர் மாற்றிக்கொள்ளவும்.

வக்ஃப் சட்டம் 1995இன் விதிகளைத் திருத்த முற்படும் மசோதா வெறும் ஒரு சாக்கு தான். பாதுகாப்பு, ரயில்வே, நிலங்களை விற்பதே பாஜகவின் ஒரே இலக்கு என்று அவர் இந்தியில் பதிவிட்டுள்ளார்.

“பாஜக உறுப்பினர்களின் நலனுக்காக வெளியிடப்பட்டது” என்று பாஜக ஏன் வெளிப்படையாக எழுதவில்லை. வஃக்பு வாரிய நிலங்கள் விற்கப்படமாட்டாது என எழுத்துப்பூர்வமாக உத்தரவாதம் அளிக்க வேண்டும்.

முஸ்லீம்களின் உரிமைகளை பாஜக பறிக்க முயற்சிக்கின்றது. வக்ஃபு மசோதாவை சமாஜ்வாதி கட்சி எதிர்க்கும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்துக்களையும் முஸ்லீம்களையும் பிளவுபடுத்துவதும், அரசியல் சாசனத்தில் முஸ்லீம் சகோதரர்களின் உரிமைகளை எப்படிப் பறிப்பது என்று யோசிப்பதே பாஜகவின் நோக்கம்.

வக்ஃப் வாரியங்களை நிர்வகிக்கும் சட்டத்தைத் திருத்த முற்படும் இந்த மசோதா, தற்போதைய சட்டத்தில் பெரியளவிலான மாற்றங்களை முன்மொழிந்துள்ளது, இதில் முஸ்லீம் பெண்கள் மற்றும் முஸ்லீம் அல்லாதவர்களின் பிரதிநிதித்துவத்தை உறுதிப்படுத்துகிறது என்று அவர் பதிவிட்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

"பராசக்தி" படப்பிடிப்பு நிறைவு! கொண்டாடிய படக்குழு! | SK | Sudha Kongara

ஜம்மு-காஷ்மீர் மாநிலங்களவைத் தேர்தல்: பாஜக வேட்பாளர்கள் அறிவிப்பு

குறைந்த வட்டி, உடனடி கடன்! Online Scam-ல் மாட்டிக்காதீங்க! | Cyber Scams | Online Shield

கர்பா குயின்... அனன்யா!

மகளிர் உலகக் கோப்பை: இந்தியாவுக்கு எதிராக ஆஸி. பந்துவீச்சு!

SCROLL FOR NEXT