இந்தியா

காதலியைக் கொன்றதாக சந்தேகிக்கப்படும் நபர் ஏரியில் சடலமாக மீட்பு!

காதலியின் கழுத்தை நெரித்து கொண்றுவிட்டு இளைஞர் தற்கொலை..

PTI

நவி மும்பையில் காதலியைக் கொன்றதாக சந்தேகிக்கப்படும் நபர் ஏரியில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வகோலி பகுதியில் அழுகிய நிலையில் ஸ்வஸ்திக் பாட்டீலின் உடல் மீட்கப்பட்டு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளதாக உதவி ஆணையர் மயூர் புஜ்பால் தெரிவித்தார்.

மும்பையின் பன்வெல் பகுதியைச் சேர்ந்தவர் பாட்டீல்(22). புதன்கிழமை தனது (19) வயது காதலியான பாவிகா மோர் என்ற கல்லூரி மாணவியைக் கழுத்து நெரித்து கொண்றுவிட்டு பாலத்திலிருந்து ஏரியில் குதித்ததாகக் கூறப்படுகிறது.

இருவரும் கடந்த இரண்டு ஆண்டுகளாகக் காதலித்து வந்தனர். புதன்கிழமை இருவருக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து கோபத்தில் காதலியின் கழுத்தை நெரித்துள்ளார். இதில் அவர் உயிரிழந்ததை அறிந்த பாட்டீல் பாலத்தில் இருந்து குறித்துள்ளார்.

இளைஞர் ஒருவர் பாலத்திலிருந்து ஏரியில் குதித்ததாக காவல்துறைக்கு தகவல் கிடைத்தது. பின்னர் ஏரிக்குச் செல்லும் வழியில் ஒரு பெண்ணின் சடலம் இருந்தது போலீஸாருக்கு தெரிய வந்தது. பெண்ணின் சடலத்தை மீட்பு போலீஸால் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையடுத்து சம்பவ இடத்தை அடைந்த காவல் துறையினர், பாட்டீலைத் தேடும் பணியில் மீனவர்கள் மற்றும் பிற குழுக்களை ஈடுபடுத்தியது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

11 மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா்கள் இடமாற்றம்: 26 மாவட்டக் கல்வி அலுவலா்களுக்கு பதவி உயா்வு

டிஎன்பிஎல் ஆலை சாா்பில் வரும் நவ.9-இல் இலவச கண் பரிசோதனை முகாம்

தாக்குதல் சம்பவம்: பாமக எம்எல்ஏ உயா்நீதிமன்றத்தில் முறையீடு

கணவா் துன்புறுத்தும் போது பெண்கள் அமைதியாக இருப்பது அடிமைத்தனம்

பாலசமுத்திரத்தில் இன்றும், வாகரையில் நாளையும் மின் தடை

SCROLL FOR NEXT