photo: ANI 
இந்தியா

புணேவில் தனியார் பேருந்தில் திடீர் தீ விபத்து

புணேவில் தனியார் பேருந்து திடீரென தீப்பிடித்த எரிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

DIN

புணேவில் தனியார் பேருந்து திடீரென தீப்பிடித்த எரிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மகாராஷ்டிர மாநிலம், புணே நகரின் ஹடப்சர் பகுதியில் உள்ள கடம்பாக் அருகே புணே-சோலாப்பூர் நெடுஞ்சாலையில் வெள்ளிக்கிழமை தனியார் பேருந்து ஒன்று திடீரென தீப்பிடித்தது.

தகவல் கிடைத்ததும் தீயணைப்புத் துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். பின்னர் உடனடியாக அவர்கள் தீ முழுவதையும் கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

இந்த விபத்தில் உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை. தீ விபத்து ஏற்பட்டதற்கான காரணம் தெரிவிக்கப்படவில்லை.

முன்னதாக, மகாராஷ்டிர மாநிலம் கோலாப்பூரில் உள்ள கேசவ்ராவ் போசலே திரையரங்கில் வியாழக்கிழமை இரவு ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் பல கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்கள் எரிந்து நாசமானது என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நலம் காக்கும் ஸ்டாலின் திட்டத்தை தொடக்கி வைத்தார் முதல்வர்!

புதிய கல்விக் கொள்கை: கல்லூரிகளில் 12 மணி நேர வகுப்புகள்! கதறும் தில்லி பல்கலை.!!

தங்கம் விலை ஒரே நாளில் ரூ. 1,120 உயர்வு!

உடுமலை விசாரணைக் கைதி மரணம்: வனத்துறை காவலர்கள் இருவர் பணியிடை நீக்கம்!

மலையாள நடிகர் கலாபவன் நவாஸ் விடுதி அறையில் மரணம்

SCROLL FOR NEXT