மேற்கு வங்கத்தில் குமேத்புர் அருகே சரக்கு ரயிலின் 5 பெட்டிகள் தடம்புரண்டு விபத்துக்குள்ளான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேற்கு வங்க மாநிலம், நியூ ஜல்பைகுரியில் இருந்து பிகாரில் உள்ள கதிஹருக்கு பெட்ரோல் ஏற்றப்பட்ட சரக்கு ரயில் இன்று சென்று கொண்டிருந்தது.
இந்த ரயில் குமேத்புர் ரயில் நிலையம் அருகே வந்துகொண்டிருந்தபோது ரயிலின் 5 பெட்டிகள் திடீரென தடம் புரண்டன. இருப்பினும் இந்த விபத்தில் யாருக்கு காயம் ஏற்படவில்லை.
நிகழ்விடத்துக்கு விரைந்த ரயில்வே அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் தண்டவாளத்தை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
விபத்தை தொடர்ந்து நியூ ஜல்பைகுரி மற்றும் கதிஹர் இடையே ரயில் போக்குவரத்து முற்றிலும் துண்டிக்கப்பட்டது. விபத்துக்கான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை.
மேலும் விபத்துக்கு குறித்த உயர்மட்ட விசாரணைக்கு அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.