குஜராத்தில் போதைப்பொருளுக்கு எதிராக போர் நடப்பதாக குஜராத் அமைச்சர் ஹர்ஷ் ரமேஷ் சங்கவி தெரிவித்துள்ளார்.
குஜராத்தில் கடந்த ஒரு வாரத்தில் மட்டும் ரூ. 836 கோடி மதிப்புள்ள போதை மருந்துகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக, குஜராத் உள்துறை அமைச்சர் ஹர்ஷ் ரமேஷ் சங்கவி தெரிவித்துள்ளார்.
பயங்கரவாத எதிர்ப்புப் படை மேற்கொண்ட இரண்டு தனித்தனி சோதனைகளில், தாஹேஜில் உள்ள ஒரு தொழிற்சாலையில் ரூ. 831 கோடி மதிப்புள்ள திரவம் நிரம்பிய போதை மாத்திரைகளும், மகாராஷ்டிரத்தின் பிவாண்டியில் உள்ள ஒரு குடியிருப்பில் இருந்து 793.232 கிலோ திரவ வடிவிலான போதை மருந்துகள் கைப்பற்றப்பட்டதுடன் 7 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேலும், மேற்கு ரயில்வே அதிகாரிகளும், சிஐடி அதிகாரிகளும் மேற்கொண்ட சோதனையில், அகமதாபாத், மேற்கு கட்ச் மற்றும் நவ்சாரி பகுதிகளில் ரூ. 2.38 லட்சம் மதிப்புள்ள 25.6 கிலோ கஞ்சாவும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து, போர்பந்தர் மற்றும் கிர் சோம்நாத்தில் ஆகிய பகுதிகளிலிருந்தும் ரூ. 5.32 கோடி மதிப்பிலான 12 கிலோ போதை மருந்துகள் பறிமுதல் செய்யப்பட்டது.
இதுகுறித்து பேசிய ஹர்ஷ், ``விரைவாக பணம் சம்பாதிக்க, கடல் வழியாக போதைப்பொருள் கடத்தப்படுகிறது. இருப்பினும், போதைப்பொருட்களுக்கு எதிரான போரை குஜராத் தொடங்கியுள்ளது’’ என்று தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.