பள்ளிகளுக்கு வருகிறது மாற்றம் Center-Center-Tirupathi
இந்தியா

இனி குட் மார்னிங் கிடையாது, ஜெய் ஹிந்த் மட்டுமே: ஹரியாணா பள்ளிகள்!

இனி குட் மார்னிங் வேண்டாம், ஜெய் ஹிந்த் மட்டுமே சொல்ல வேண்டும் என ஹரியாணா பள்ளிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

DIN

ஆகஸ்ட் 15ஆம் தேதி நாட்டின் சுதந்திர தினம் கொண்டாடப்படவிருக்கும் நிலையில், ஹரியாணா மாநில பள்ளிகளில் தற்போதே அதற்கான முன்னேற்பாடுகள் செய்யப்பட்டு விட்டன.

மாநில பள்ளிக் கல்வித் துறை, அனைத்து மாவட்ட பள்ளிகளுக்கும் அனுப்பியிருக்கும் சுற்றறிக்கையில், இனி மாணவர்கள் காலையில் ஆசிரியர்களைப் பார்த்ததும் குட் மார்னிங், எனவோ மாலையில் குட் ஈவ்னிங் எனவோ சொல்லக் கூடாது என்றும், ஆகஸ்ட் 15ம் தேதி முதல் எப்போதும் ஜெய் ஹிந்த் மட்டுமே சொல்ல வேண்டும் என்றும் தெரிவித்திருக்கிறது.

மாணவர்களிடையே நாட்டுப் பற்றை வளர்க்க வேண்டும் என்பதற்காக இந்த அறிவுறுத்தல் அனுப்பப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

நாட்டின் ஒற்றுமை மற்றும் மரியாதையை வெளிப்படுத்தும் விதமாக ஒவ்வொரு முறையும் ஜெய் ஹிந்த் சொல்லும்போது மக்களிடையே உத்வேகம் பிறக்கும் என்றும் அந்த அறிவுறுத்தலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

78-ஆவது சுதந்திர நாளை முன்னிட்டு, தேசியக் கொடியை வாங்க விரும்பும் மக்களுக்கு அவா்களுடைய வீட்டிலேயே தேசியக் கொடியை கொண்டு சோ்ப்பதற்கு அஞ்சல் துறை சாா்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. நாட்டின் 78-ஆவது சுதந்திர தின விழா வரும் 15-ஆம் தேதி கொண்டாடப்படவுள்ளது. இதை முன்னிட்டு அஞ்சல் அலுவலகங்களில் தேசியக் கொடி விற்பனை முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

உலக சிந்தனை நாள் விழிப்புணா்வு பேரணி

மேல்மருவத்தூா்: 10,000 பக்தா்கள் ஸ்ரீசக்கரம் வரைந்து கூட்டு வழிபாடு செய்து உலக சாதனை

செங்கல்பட்டு குறைதீா் கூட்டத்தில் நலத்திட்ட உதவிகள்

கைலாசநாதா் கோயில் கும்பாபிஷேகம்

டிஎன்பிஎஸ்சி தோ்வில் வென்றவா்களுக்குப் பாராட்டு

SCROLL FOR NEXT