பகவந்த் மான் 
இந்தியா

உண்மைக்குக் கிடைத்த வெற்றி: உச்ச நீதிமன்றத் தீர்ப்பை வரவேற்ற பகவந்த் மான்!

உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பைப் பாராட்டுகிறேன், வரவேற்கிறேன்..

PTI

ஆம் ஆத்மி கட்சித் தலைவர் மணீஷ் சிசோடியாவுக்கு ஜாமீன் வழங்கிய உச்ச நீதிமன்றத் தீர்ப்பைப் பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் வரவேற்பு அளித்துள்ளார்.

கலால் கொள்கை முறைகேடு வழக்கில் கைது செய்யப்பட்ட தில்லியின் முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியா மீது அமலாக்கத் துறை மற்றும் சிபிஐ தொடர்ந்த இரண்டு வழங்குகளிலும் ஜாமீன் வழங்கி உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது.

உச்ச நீதிமன்ற நீதிபதிகள் பி.ஆர். கவாய் மற்றும் கே.வி. விஸ்வநாதன் ஆகியோர் அடங்கிய அமர்வு, ஜாமீன் வழங்கியிருக்கிறது. மணீஷ் சிசோடியா கைது செய்யப்பட்டு ஒன்றைரை ஆண்டுகளுக்குப் பிறகு இன்று அவருக்கு ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக மணீஷ் சிசோடியாவின் எக்ஸ் பதிவில்,

உண்மைக்குக் கிடைத்த வெற்றி என்று உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பைப் பாராட்டுவதாகவும், வரவேற்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தில்லியின் முன்னாள் துணை முதல்வரான சிசோடியா கடந்த பிப்ரவரி 26, 2003 அன்று சிபிஐ கைது செய்தது. இதையடுத்து மார்ச் 9, 2023ல் பணமோசடி வழக்கில் அமலாக்கத் துறை அவரை கைது செய்தது.

இந்த நிலையில் ரூ.10 லட்சம் செலுத்துவதோடு, தனது கடவுச்சீட்டை ஒப்படைக்க நிபந்தனை விதித்து உச்ச நீதிமன்றம் ஜாமீன் வழங்கியிருக்கிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மரியம் டக்கா.. காஸாவில் கொல்லப்பட்ட அசோசியேட் பிரஸ் நிறுவன புகைப்பட செய்தியாளர்!

சீரியலில் சிறப்புத் தோற்றத்தில் களமிறங்கும் வனிதா விஜயகுமார்!

கெனிஷா கடவுள் கொடுத்த வரம்: ரவி மோகன்

தென்கிழக்கு ஆசிய நாடுகளில் கனமழை! வியத்நாமில் வீசிய புயலால் 3 பேர் பலி!

மாசுபாட்டைக் குறைக்க பள்ளிப் பேருந்துகள் மின்சாரத்தில் இயங்க வேண்டும்: ரேகா குப்தா

SCROLL FOR NEXT