தீ விபத்து ஏற்பட்ட குருகிராம் பணிமனை. 
இந்தியா

குருகிராம் பணிமனையில் தீவிபத்து: 16 சொகுசு கார்கள் எரிந்து நாசம்!

குருகிராமில் உள்ள கார் பணிமனையில் ஏற்பட்ட தீவிபத்தில் 16 சொகுசு கார்கள் எரிந்து நாசமாயின.

DIN

குருகிராமில் உள்ள கார் பணிமனையில் ஏற்பட்ட தீவிபத்தில் 16 சொகுசு கார்கள் எரிந்து நாசமாயின.

ஹரியாணா மாநிலம், செக்டார் 41 பகுதியில் உள்ள கார் பணிமனையில் வெள்ளிக்கிழமை அதிகாலை 3 மணியளவில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இந்த சம்பவத்தின்போது மெர்சிடீஸ், பிஎம்டபிள்யூ, ரேஞ்ச் ரோவர், வால்வோ, ஃபோர்டு உள்ளிட்ட 16 உயர் ரக கார்கள் பணிமனையில் நிறுத்தப்பட்டிருந்தன.

இவை அனைத்தும் தீவிபத்தில் எரிந்து சாம்பலாகிவிட்டன. மேலும் சில பழுதடைந்த வாகனங்களும் தீயில் எரிந்து நாசமாகின. தகவல் கிடைத்ததும் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு சென்று 3 மணி நேரத்திற்கும் மேலாக போராடி தீயை அணைத்தனர். இந்த தீ விபத்தில் நாசமடைந்த வாகனங்களின் விலை சுமார் ரூ.7 கோடி இருக்கும் என அதிகாரி தெரிவித்தார்.

சம்பவத்தின்போது ஊழியர்கள் யாரும் பணிமனையில் இல்லாததால் உயிரிசேதம் தவிர்க்கப்பட்டது. "தீ விபத்துக்கான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை. எங்கள் குழுவினர் சம்பவ இடத்திற்கு வந்து தீயை கட்டுப்படுத்தினர், ஆனால் அவர்களால் கார்களை காப்பாற்ற முடியவில்லை," என்று தீயணைப்பு அதிகாரி ஒருவர் மேலும் கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நவராத்திரி ஸ்பெஷல்... வித்யா பாலன்!

இந்திய ராணுவத்தால் பலியானோரின் குடும்பத்துக்கு பரிசுத் தொகையை வழங்கிய பாகிஸ்தான் அணி!

மின்மினி... சாக்‌ஷி அகர்வால்!

சென்னை T.Nagar மேம்பாலம்! முதல்வர் M.K.Stalin திறந்துவைத்தார்! | DMK | Flyover | Shorts

பேசக்கூடிய மனநிலையில் இல்லை: ஆதவ் அர்ஜுனா

SCROLL FOR NEXT