மருமகனுக்கு பரிமாறப்பட்ட 100 வகையான உணவு படம்: எக்ஸ்
இந்தியா

மருமகனுக்காக 100 வகையான உணவு செய்த மாமியார்!

ஆந்திரத்தில் வீட்டிற்கு வந்த மருமகனுக்கு 100 வகையான உணவுகளைச் செய்து பரிமாறிய மாமியார்.

DIN

ஆந்திரத்தில் வீட்டிற்கு வந்த மருமகனுக்கு 100 வகையான உணவுகளைச் செய்து பரிமாறி, மாமியார் அசத்தியுள்ளார்.

இது தொடர்பான விடியோ இணையத்தில் பலரால் பகிரப்பட்டு வருகிறது.

ஆந்திர மாநிலம் காக்கிநாடாவைச் சேர்ந்தவர் ரவி தேஜா. இவர் கிர்லாம்பூடி மண்டலத்திற்குட்பட்ட, தாமரடா கிராமத்தைச் சேர்ந்த ரத்னகுமாரி என்பவரைக் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் திருமணம் செய்துகொண்டார்.

இந்நிலையில், ஆஷாதா மாதம் முடிந்து முதல்முறையாக வீட்டிற்கு வந்த மருமகனுக்கு ரத்னகுமாரி வீட்டில் விருந்து வைத்துள்ளனர். இதில், ரவி தேஜாவின் மாமியார் 100 வகையான பச்சரிசி உணவுகளைச் செய்து மருமகனுக்கு பரிமாறியுள்ளார்.

ரவி தேஜா - ரத்னகுமாரி

ஆஷாதா மாதம் என்பது தமிழில் ஆடி மாதம் போன்றதாகும். ஜூலை மாதத்தின் பிற்பாதியும் ஆகஸ்ட் மாதத்தின் முதல் பாதியும் ஆஷாதா மாதமாக ஆந்திரம், கர்நாடகம் போன்ற மாநிலங்களில் கடைபிடிக்கப்படுகிறது.

விவசாயிகள் புதிய பயிர் வளர்ப்புகளில் ஈடுபடுவார்கள். நீர்நிலைகள் நிரம்பி பூமி செழிக்கும் மாதமாகவும் இம்மாதம் பார்க்கப்படுகிறது.

100 வகையான பிரமாண்ட விருந்து குறித்து பேசிய மருமகன் ரவிதேஜா, இனிப்பு, காரம் என 100 வகையான உணவுகளை ஒரே இடத்தில் கண்டது மகிழ்ச்சி என்றும், மாமியார் வீட்டின் இச்செயல் தன்னை மிகுந்த ஆச்சரியத்தில ஆழ்த்தியதாகவும் கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கோவை, ஜெய்ப்பூா் இடையே வாராந்திர சிறப்பு ரயில்கள்

காா் மோதியதில் தீப்பற்றி எரிந்த இருசக்கர வாகனம்: 3 போ் படுகாயம்

ஒசூரில் ‘நலம்காக்கும் ஸ்டாலின்’ திட்டம் 1,962 போ் பங்கேற்பு

நீதிமன்றத்துக்கு தவறான தகவல்: ரயில்வே காவல் ஆய்வாளா் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவு

பட்டியல் இனத்தவருக்கு ஆதித்தமிழா் என ஜாதி சான்று கோரிய மனு முடித்துவைப்பு

SCROLL FOR NEXT