தில்லி: கிரிக்கெட் மைதானத்தில் மின்சாரம் பாய்ந்து 13 வயது சிறுவன் பலி
தலைநகர் தில்லியில் கிரிக்கெட் மைதானத்தில் மின்சாரம் பாய்ந்து 13 வயது சிறுவன் பலியான நிகழ்வு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தலைநகர் தில்லியில் கிரிக்கெட் மைதானத்தில் மின்சாரம் பாய்ந்து 13 வயது சிறுவன் பலியான நிகழ்வு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது, சனிக்கிழமை மதியம் 1.30 மணியளவில் அழைப்பு வந்தது. கோட்லா விஹார் பிஎச் -2 இல் உள்ள கிரிக்கெட் மைதானத்தில் 13 வயது சிறுவன் கிரிக்கெட் விளையாடியுள்ளான்.
அச்சிறுவன் பந்தை எடுக்கச் சென்றபோது, மைதானத்தின் மூலையில் அமைந்திருந்த மின்கம்பத்தில் இருந்து மின்சாரம் தாக்கியுள்ளது.
உடனடியாக அச்சிறுவன் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டான். ஆனால் அந்த சிறுவன் ஏற்கெனவே இறந்துவிட்டதாக மருத்துவமனை நிர்வாகம் அறிவித்தனர்.
இதுகுறித்து வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்று காவல்துறை தெரிவித்துள்ளது.
இச்சம்பவத்தால் அப்பகுதியில் மக்கள் கூடியதால் சிறிது நேரம் பரபரப்பு காணப்பட்டது.