போகாபுரம் விமான நிலையம் 
இந்தியா

போகபுரம் விமான நிலையத்தை ஆய்வு செய்த அமைச்சர் ராம்மோகன்!

போகபுரம் விமான நிலையத்தின் பணிகளின் முன்னேற்றத்தை இன்று ஆய்வு செய்த சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் கே.ராம்மோகன் நாயுடு.

DIN

புதுதில்லி: 2026 ஜூன் மாதத்திற்குள் செயல்படும் என்று எதிர்பார்க்கப்படும் ஆந்திராவின் போகபுரம் விமான நிலையத்தின் பணிகளின் முன்னேற்றத்தை இன்று ஆய்வு மேற்கொண்டார் சிவில் விமான போக்குவரத்து அமைச்சர் கே.ராம்மோகன் நாயுடு.

விமான நிலையத்தை ஜிஎம்ஆர் குழுமம் உருவாக்கி வரும் நிலையில், முனைய கட்டிடம், ஓடுபாதை கட்டுமானம், ஏப்ரன் மற்றும் அணுகு சாலைகள் உள்ளிட்ட விமான நிலையத்தின் வளர்ச்சியின் முக்கிய அம்சங்களை இந்த ஆய்வு உள்ளடக்கியது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

விமான நிலையத்தின் சுமார் 36 சதவிகித பணிகள் நிறைவடைந்துள்ள நிலையில், இது உத்தரஆந்திர பிராந்தியத்தின் இணைப்பு மற்றும் பொருளாதார வளர்ச்சியை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இன்று நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தின் போது, 2026 ஜூன் மாதத்திற்குள் விமான நிலையத்தை செயல்பாட்டுக்கு கொண்டுவருவதற்கான பணிகளை விரைந்து முடிக்குமாறு அதிகாரிகளை முதல்வர் சந்திரபாபு நாயுடு கேட்டுக்கொண்டார்.

கடந்த மாதத்தில் மூன்று முறை விமான நிலைய பணிகளை ஆய்வு மேற்கொண்ட சிவில் விமான போக்குவரத்து அமைச்சர் கே.ராம்மோகன், இது தேசிய ஜனநாயக கூட்டணி தலைமையிலான கூட்டணி அரசுக்கு ஒரு மதிப்புமிக்க மகுடம் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இந்தியா அனைவருக்குமானது, குறிப்பிட்ட சித்தாந்தத்திற்கு மட்டுமல்ல: முதல்வர் ஸ்டாலின்

மீண்டும் ரூ. 94,000 -யைக் கடந்த தங்கம் விலை!

உலகக் கோப்பை ஹாக்கி: அனுமதி இலவசம் - டிக்கெட்டுகளை பெறுவது எப்படி?

இலங்கை அருகே உருவாகும் மற்றொரு புயல்! வடதமிழக கடற்கரையை நோக்கி நகரும்!

தேசிய பால் நாள்: விவசாயிகளிடம் குறைகளைக் கேட்டறிந்த அமைச்சர்!

SCROLL FOR NEXT