நீடா அம்பானியுடன் மனு பாக்கர் மற்றும் மனு பாக்கரின் தாயார் படம் : எக்ஸ்
இந்தியா

நீடா அம்பானியை சந்தித்த மனு பாக்கர்!

பாரீஸ் ஒலிம்பிக் தொடரில் பதக்கம் வென்ற மனு பாக்கர், தொழிலதிபர் நீடா அம்பானியை சந்தித்தார்.

DIN

பாரீஸ் ஒலிம்பிக் தொடரில் இந்தியா சார்பில் பதக்கம் வென்ற மனு பாக்கர், தொழிலதிபர் நீடா அம்பானியை இன்று (ஆக. 11) சந்தித்தார்.

2024 பாரீஸ் ஒலிம்பிக் தொடரில் பெண்களுக்கான 10 மீட்டர் துப்பாக்கி சுடுதல் போட்டியில் இந்தியா சார்பில் பங்கேற்ற மனு பாக்கர் வெண்கலப் பதக்கம் வென்றார்.

இம்முறை ஒலிம்பிக் தொடரில் முதல்முறை அறிமுகம் செய்யப்பட்ட கலப்பு இரட்டையர் துப்பாக்கி சுடுதல் போட்டியிலும், இந்திய வீரர் சரப்ஜோத் சிங் உடன் வெண்கலப் பதக்கம் வென்றார்.

ஒலிம்பிக் போட்டியில் துப்பாக்கி சுடுதல் போட்டியில் பதக்கம் வென்ற முதல் இந்தியப் பெண் என்ற சாதனையையும் மனு பாக்கர் படைத்தார். இதனால் அரசியல் தலைவர்கள், விளையாட்டு வீரர்கள் என பலதுறை பிரபலங்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

ஒலிம்பிக் போட்டிகளை முடித்துக்கொண்டு இந்தியா திரும்பிய மனு பாக்கர், அரசியல் தலைவர்களை சந்தித்து வருகிறார். தற்போது தொழிலதிபர் நீடா அம்பானியை சந்தித்து வாழ்த்து மனு பாக்கர் பெற்றார். உடன் அவரின் தாயாரும் இருந்தார்.

இது தொடர்பாக தனது எக்ஸ் தளப் பக்கத்தில் பகிர்ந்துள்ள மனு பாக்கர், நீடா அம்பானியை சந்தித்ததும், அவரிடம் ஆசி பெற்றதும் மிகவும் சிறப்பான தருணம். உண்மையாக மகிழ்ச்சியில் நிரம்பியுள்ளேன் எனப் பதிவிட்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

திமுக கூட்டணியில் குழப்பம் இல்லை: சு. திருநாவுக்கரசா்

உலகளாவிய தயாரிப்புகளை இந்தியாவிற்கு கொண்டு வரும் பிலிப்ஸ்!

நெல்லையில் பரபரப்பு... காவல் நிலையம், சோதனைச் சாவடி அருகே பெட்ரோல் குண்டு வீச்சு!

தவெக நிர்வாகிகளை குண்டுக்கட்டாக தூக்கிச் சென்று கைது செய்த போலீசார்!

பெண்கள் மீதான கறை மமதா பானர்ஜி: பாஜக கடும் விமர்சனம்

SCROLL FOR NEXT