இந்தியா

7 வயது சிறுமியிடம் நிர்வாண கோலத்தில் பாலியல் சீண்டல்: 70 வயது முதியவர் பிடிபட்டார்!

7 வயது சிறுமியை வீட்டில் அடைத்து ஆடையின்றி நின்ற முதியவர் பிடிபட்டார்..

DIN

70 வயதைக் கடந்த முதியவர் ஒருவர், 7 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமைக்குள்ளாக்க முற்பட்ட சம்பவம் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உத்தர பிரதேசத்தின் மக்பரா பகுதியைச் சேர்ந்த மௌலானா முக்தார் என்ற முதியவர், அதே பகுதியைச் சேர்ந்த 7 வயதே ஆன சிறுமி ஒருவருக்கு மிட்டாய்களை வாங்கிக் கொடுத்து, சிறுமியை தன்னுடைய வீட்டுக்கு அழைத்துச் சென்று பாலியல் தொல்லை அளித்திருப்பது அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சிறுமியுடன் தனது வீட்டுக்குச் சென்றதும், கதவினை மூடிவிட்டு சிறுமிக்கு பாலியல் துன்புறுத்தல் அளிக்க முற்பட்டுள்ளார் அந்த நபர். அதேவேளையில், முதியவருடன் சிறுமி செல்வதைக் கண்ட அதே பகுதியைச் சேர்ந்த நபர் ஒருவக்கு சந்தேகம் ஏற்படவே, அவர்கள் இருவரையும் ரகசியமாக பின்தொடர்ந்து சென்றுள்ளார்.

அதன்பின், வீட்டின் ஜன்னல் வழியாக உள்ளே என்ன நடக்கிறது என்பதை நோட்டமிட்ட அந்த நபர், ஆடைகளைத் துறந்துவிட்டு நிர்வாண கோலத்தில் இருந்த முதியவரின் செயலைக் கண்டு ஒருகணம் ஆடிப்போய்விட்டார். உடனடியாக தனது கைப்பேசி கேமராவில் முதியவரின் நடவடிக்கைகளை சில நிமிடங்கள் வரை படம்பிடித்த அவர், உடனடியாக அக்கம்பக்கத்தினரை அழைத்து அவர்களுடன் சேர்ந்து முதியவரின் வீட்டுக்குச் சென்றுள்ளார்.

அங்கே கதவை உடைத்துக் கொண்டு உள்ளே சென்றவர்கள், ஆடையின்றி இருந்த முதியவரைக் கையும்களவுமாகப் பிடித்து, அடித்து இழுத்துச் சென்று தர்மஅடி கொடுத்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட மௌலானா முக்தார்

இதனிடையே தன்னை மன்னித்துவிடுமாறு கெஞ்சியுள்ள அந்த முதியவர் ஆடை மாற்றச் சென்றபோது, வீட்டின் பின்பக்க வாயில் வழியாக தப்பித்து ஓடிவிட்டதாகவும் கூறப்படுகிறது.

இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில், வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வரும் காவல்துறையினர், தப்பித்தோடிய நபரை தேடி வந்தனர்.

இந்த நிலையில் திங்கள்கிழமை(ஆக. 12) அவர் பிடிபட்டுள்ளார். அவரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

என் அண்ணன் புரட்சிக் கலைஞர் விஜயகாந்த் பிறந்த மண்! - மதுரை குறித்து Vijay | TVK

தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்ட இளம்பெண்ணைக் குறிப்பிட்ட விஜய்!

இந்திய டி20 அணியில் இடம்பெறாதது குறித்து ஷ்ரேயாஸ் தந்தை வேதனை

தமிழக குழந்தைகளுக்குத் தாய்மாமன்! விஜய் பேச்சு

சாம்சன் கேலக்ஸி எஸ்24 அல்ட்ரா.. யாரும் எதிர்பார்க்காத அதிரடி தள்ளுபடியில்!

SCROLL FOR NEXT