இந்தியா

ஐடி துறையின் சில பிரிவுகளில் சம்பளம் குறைந்து வந்தாலும், இந்தப் பிரிவுகளில் குறையவே குறையாது!

பொருளாதார நிலையை மேற்கோள் காட்டி, சம்பள உயர்வைக் குறைக்கும் ஐடி நிறுவனங்கள்

இணையதளச் செய்திப் பிரிவு

இந்தியத் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் ஒற்றை இலக்கத்தில் ஊதிய உயர்வை வழங்குகின்றன.

மந்தமான பொருளாதார நிலையை கருத்தில் கொண்டு, இந்தியாவின் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள், தங்கள் நிறுவனத்தின் பணியாளர்களின் ஊதிய உயர்வைக் குறைத்துள்ளன.

அதிகமாக ஊதிய உயர்வு வழங்கி வந்த இன்ஃபோசிஸ் நிறுவனம், 2024 ஆம் நிதியாண்டில், 9 சதவிகிதம் மட்டுமே ஊதிய உயர்வு அளித்துள்ளது. ஆனால், நிதியாண்டு 2022 இல் 14.6 சதவிகிதமும், 2023 இல் 9.9 சதவிகிதமும் அளித்திருந்தது.

டிசிஎஸ் நிறுவனம் 2022 ஆம் நிதியாண்டில், 10.5 சதவிகிதமும், 2023 இல் 9.4 சதவிகிதமும் அளித்திருந்தது. ஆனால், 2024 ஆம் நிதியாண்டில் 7 முதல் 9 சதவிகிதம் மட்டுமே வழங்கியுள்ளது.

டெக் மஹிந்திரா நிறுவனம், 2023 ஆம் நிதியாண்டில், 6 சதவிகிதம் அளித்தது; ஆனால், 2024 ஆம் ஆண்டில், 5.6 சதவிகிதமாகக் குறைத்துள்ளது. ஹெச்.சி.எல். டெக் நிறுவனம் 2022 இல் 6.8 சதவிகிதத்திலிருந்து, 2023, 2024 ஆம் ஆண்டுகளில் 5 சதவிகிதமாகக் குறைத்தது.

நிறுவனங்களின் இந்த செயல்முறை குறித்து, இந்தியத் தொழில்நுட்ப நடைமுறையின் தலைவர் ப்ரன்ஷு உபாத்யாய் கூறுவதாவது, ``பணியாளர்களுக்கு ஊதியம் அளிப்பதும்கூட, நிறுவனங்களின் மிகப்பெரிய செலவுகளில் ஒன்றாகும். சிறிய வெட்டுகளும்கூட, ஒரு பெரிய தாக்கத்திற்கு வழிவகுக்கும் என்று நிறுவனங்கள் நம்புகின்றன” என்று தெரிவிக்கிறார்.

இருப்பினும், ``நிறுவனங்களில் ஊதிய உயர்வுகள் குறைக்கப்பட்டாலும், முக்கியமான திறமையாளர்களைத் தக்கவைத்துக் கொள்வதற்காக, வேறுபட்ட உயர்வுகளைத் தேர்வு செய்யப்படுகின்றன” என்று வேலைவாய்ப்பு நிறுவனமான மெர்சர் இந்தியாவின் தொழில் தலைவர் மான்சி சிங் கூறுகிறார்.

ஆனால், செயற்கை நுண்ணறிவு, இயந்திரக் கல்வி, சைபர் பாதுகாப்பு, கிளவுட் கம்ப்யூட்டிங், தரவு ஆய்வாளர் பதவி வகிப்பவர்கள் மட்டும் தொடர்ந்து, 12 முதல் 15 சதவிகிதம் வரையிலான, அதிகமான ஊதிய உயர்வினைப் பெற்று வருகின்றனர்.

பல்வேறு துறைகளில் உள்ள நிறுவனங்கள், டிஜிட்டல் முறையில் மாறுவதற்கான முயற்சிகளில் கவனம் செலுத்துவதால், மேற்குறிப்பிட்ட தொழில் வல்லுநர்களின் ஊதிய உயர்வு அதிகரித்த வண்ணம் உள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ரிஷபத்துக்கு எப்படி இருக்கும் இன்று.. தினப்பலன்கள்!

நாளைய மின்தடை: எழும்பூா், சோழிங்கநல்லூா், கோடம்பாக்கம், சேத்துப்பட்டு

வேலூா் மாவட்டத்தில் 15 துணை வட்டாட்சியா்கள் இடமாற்றம்

ஆடிப் பெருக்கு தினத்தில் பெண்கள் சிறப்பு பூஜை

இளைஞா்களுக்கு அதிகரித்துவரும் மாரடைப்பு அபாயம்! இதய நல மருத்துவா்கள் எச்சரிக்கை

SCROLL FOR NEXT