கர்நாடகத்தில் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ய முயன்ற ஆசிரியரைக் காவல்துறையினர் கைது செய்தனர்.
கர்நாடகத்தின் கலபுராகி மாவட்டத்தில் உள்ள ஒரு அரசுப் பள்ளியில், ஐந்தாம் வகுப்பு படிக்கும் 11 வயதான மாணவி, உணவு இடைவெளி முடிந்து, வகுப்பறைக்குள் நுழைந்துள்ளார். அப்போது, வகுப்பறையில் வேறு யாரும் இல்லாத நேரத்தில், மாணவியின் ஆசிரியர் மாணவியை பாலியல் வன்கொடுமை செய்ய முயன்றுள்ளார்.
இதனைத் தொடர்ந்து, சிறுமி உதவிக்காக, சத்தம் போட்டுள்ளார். இதனையடுத்து, ஆசிரியர் மாட்டிக்கொள்ளாமல் இருப்பதற்காக, பள்ளியைவிட்டு தப்பியோடியுள்ளார்.
இந்த நிலையில், சிறுமி வீட்டுக்குச் சென்று, ஆசிரியரின் செயலை பெற்றோரிடம் முறையிட்டுள்ளார்.
இதனைத் தொடர்ந்து, பள்ளிக்குச் சென்ற சிறுமியின் பெற்றோர் தலைமையாசிரியரிடம் புகார் அளித்ததுடன், காவல் நிலையத்திலும் புகார் அளித்துள்ளனர்.
இதனையடுத்து, ஆசிரியரின் மீது போக்ஸோ மற்றும் பாரதிய நியாய் சன்ஹிதாவின் பிற பிரிவுகளின்கீழ் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், ஆசிரியரைக் கைது செய்தனர்.
கடந்த மூன்று ஆண்டுகளில், பெண்கள் மீது பதிவான வழக்குகளைவிட, சிறார்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை வழக்குகள் மூன்று மடங்கு அதிகரித்துள்ளதாகக் காவல்துறையினர் தெரிவித்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.