உச்சநீதிமன்ற 9 நீதிபதிகள் அமர்வு கோப்புப்படம்
இந்தியா

கனிம வளங்களுக்கான வரியை முன்தேதியிட்டு மாநில அரசுகள் வசூலிக்கலாம்: உச்சநீதிமன்றம்

சுரங்க நிறுவனங்களிடம் இருந்து 2005 முதல் மத்திய அரசு வசூலித்த வரியை மாநிலங்களுக்கு வழங்க உத்தரவு.

DIN

கனிம வளங்களுக்கான வரியை மாநில அரசுகள் முன்தேதியிட்டு வசூலிக்க உச்சநீதிமன்றம் புதன்கிழமை அனுமதி அளித்துள்ளது.

கனிம வளங்களுக்கு வரி விதிக்க மாநில அரசுகளுக்கே அதிகாரம் இருப்பதாக கடந்த ஜூலை 15ஆம் தேதி உச்சநீதிமன்றத்தின் 9 நீதிபதிகள் அமர்வு தீர்ப்பு வழங்கியது.

இந்நிலையில், முன்தேதியிட்டு வரியை வசூல் செய்வது தொடர்பாக சுரங்க நிறுவனங்கள் மற்றும் மத்திய அரசு தரப்பில் உச்சநீதிமன்றத்தில் முறையிடப்பட்டது.

இந்த மனுவை விசாரித்த தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் தலைமையிலான 9 நீதிபதிகள் அமர்வு, மத்திய அரசின் கோரிக்கையை நிராகரித்தனர்.

ஏப்ரல் 1, 2005 முதல் தற்போது வரையிலான வரிகளை சுரங்க நிறுவனங்கள் மற்றும் மத்திய அரசிடம் இருந்து மாநில அரசுகள் முன்தேதியிட்டு வசூலித்து கொள்ள அனுமதி வழங்கப்பட்டது.

மேலும், முன்தேதியிட்டு வசூலிக்கும் வரிக்கு அபராதம் மட்டும் வட்டி போன்றவை வசூலிக்கக் கூடாது என்றும், மாநிலங்களுக்கு தவணை முறையில் 12 ஆண்டுகளில் வழங்கலாம் எனவும் உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கனிம வளங்கள் மீது மாநில அரசுகளுக்கு இருக்கும் உரிமைக்கு எதிராக மத்திய அரசு மற்றும் சுரங்க நிறுவனங்கள் தொடர்ந்த வழக்கில், ஜூலை 25ஆம் தீர்ப்பளிக்கப்பட்டது.

தலைமை நீதிபதி தலைமையிலான 9 நீதிபதிகள் அமர்வில், கனிம வளங்கள் மீது மாநிலங்களுக்கு உரிமை இருப்பதாக 8 நீதிபதிகள் தீர்ப்பு அளித்தனர். நீதிபதி நாகரத்னா மட்டும் மாறுபட்ட தீர்ப்பு வழங்கினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அமெரிக்காவில் நடுவானில் மோதிக் கொண்ட சிறிய ரக விமானங்கள்! ஒருவர் பலி

ராகுல் அனைத்து மக்களிடமிருந்தும் ஆதரவைப் பெறுகிறார்: அஜய் ராய்!

விஜய்யுடன் கூட்டணியா? - ஓபிஎஸ் பதில்

கொடைக்கானலில் இனி ஒரே நுழைவுக் கட்டணம்

அதர்வாவின் தணல் டிரைலர்!

SCROLL FOR NEXT