வானிலை மாற்றம் காரணமாக ஜப்பான் விமானங்கள் ரத்து!
ஜப்பானின் மோசமான வானிலையால் தில்லியிலிருந்து ஜப்பான் செல்லும் ஏர் இந்தியா விமானங்கள் ரத்து
வானிலை எச்சரிக்கை காரணமாக தில்லியில் இருந்து ஜப்பானுக்கு செல்லவிருந்த ஏர் இந்தியா விமானங்கள் ரத்து செய்யப்பட்டன.
ஜப்பானின் டோக்கியோவில் நிகழும் மோசமான வானிலை எச்சரிக்கைகளின் காரணமாக, ஆக. 16, வெள்ளிக்கிழமையில், தில்லியிலிருந்து ஜப்பானின் நரிதா விமான நிலையத்திற்கு செல்வதற்கு திட்டமிடப்பட்ட ஏஐ306, ஏஐ307 ஆகிய ஏர் இந்தியா விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
முன்பதிவு செய்த பயணிகளுக்கு மறுசீரமைப்பில் ஒரு முறை தள்ளுபடி, பயணத்தை ரத்து செய்தாலும் முழுப் பணத்தைத் திருப்பித் தரப்படும் என்று விமான நிறுவனம் தெரிவித்துள்ளது.