பிரதமர் நரேந்திர மோடி DD
இந்தியா

2047-ல் வளர்ச்சியடைந்த நாடாக இந்தியா மாறும்: மோடி

பிரதமர் நரேந்திர மோடியின் சுதந்திர தின உரை..

DIN

செங்கோட்டையில் கொடியேற்றிய பிறகு பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களிடம் உரையாற்றி வருகிறார்.

வரலாற்றுச் சிறப்புமிக்க செங்கோட்டை கொத்தளத்தில் சுதந்திர தினத்தை முன்னிட்டு தொடா்ந்து 11-ஆவது முறையாக பிரதமா் மோடி வியாழக்கிழமை காலை தேசியக் கொடி ஏற்றினாா்.

தொடர்ந்து, நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி ஆற்றிய உரையில் பேசியதாவது:

“நாட்டுக்காக இன்னுயிர் தந்தவர்களை இந்நேரத்தில் போற்றுகிறேன். விவசாயிகளும், ராணுவ வீரர்களும் நாட்டின் வளர்ச்சிக்காக பாடுபடுகின்றனர். நாட்டுக்காக தியாகம் செய்தவஎர்களுக்கு நாம் கடமைப்பட்டுள்ளோம்.

கடந்த சில ஆண்டுகளாக இயற்கை சீற்றங்கள் அதிகரித்து வருகின்றன. இதனால், பலரும் தங்களின் உறவினர்கள், சொத்துகளை இழந்துள்ளனர். தேசமும் இழப்பை சந்தித்துள்ளது. இன்று அவர்களுக்கு அனுதாபங்களை தெரிவித்துக் கொள்கிறேன். வயநாடு சம்பவம் வருத்தமளிக்கிறது. தேசம் அவர்களுக்கு உறுதுணையாக நிற்கும் என்று உறுதியளிக்கிறேன்.

பிரிட்டிஷ் ஆட்சியை வேறோடு பிடிங்கி எறிந்த 40 கோடி மக்களின் ரத்தத்தை சுமந்த பெருமை உண்டு. இன்று 140 கோடி மக்கள் உள்ளோம். ஒன்றுபட்டால் தடைகளை கடந்து 2047இல் வளர்ச்சியடைந்த நாடாக உருவாக முடியும்.

உள்ளூர் உற்பத்தி என்பது பொருளாதார அமைப்பிற்கு ஒரு புதிய மந்திரமாக மாறியதில் மகிழ்ச்சி அடைகிறேன். ஒவ்வொரு மாவட்டமும் அதன் உற்பத்தியில் பெருமை கொள்ளத் தொடங்கியுள்ளன. 'ஒரு மாவட்டம் ஒரு தயாரிப்பு' என்ற சூழல் உள்ளது.

ஜல் ஜீவன் திட்டத்தால் பயனடைந்தவர்களின் எண்ணிக்கை 15 கோடியை கடந்துள்ளது. நாட்டின் பாதுகாப்புப் படைகள் துல்லிய தாக்குதல் மற்றும் வான்வழித் தாக்குதல்களை நடத்தும்போது ஒவ்வொரு இந்தியனும் பெருமை கொள்கிறார்.

வங்கித் துறையில் சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. உலகளவில் இந்திய வங்கிகள் வலிமையானதாக மாறியுள்ளது. முன்னதாக வசதிகள் செய்து தரக் கோரி மக்கள் அரசிடம் கோரிக்கை வைத்து வந்தனர். தற்போது, அவர்கள் வீடு தேடிச் சென்று தேவையானவை ஏற்பாடு செய்து தரப்படுகிறது.

நாட்டு இளைஞர்கள் மெதுவான வளர்ச்சியை விரும்பவில்லை, பல்வேறு துறைகளில் வளர்ச்சி கண்டு நமது நாட்டின் பொற்காலமாக மாறியுள்ளது.” எனத் தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஏப்ரல்-ஜூன் காலாண்டில் 7.8% பொருளாதார வளா்ச்சி: மத்திய அரசு

வல்லக்கோட்டை முருகன் கோயிலில் இலவச திருமணம்

உத்தரகண்ட் நிலச்சரிவு: 5 போ் உயிரிழப்பு

அமெரிக்க வரி விதிப்பு: மத்திய அரசைக் கண்டித்து திமுக கூட்டணி செப்.2-இல் ஆா்ப்பாட்டம்

பிரதமரின் தாய் குறித்து அவதூறு: ராகுல் மன்னிப்புக் கோர அமித் ஷா வலியுறுத்தல்

SCROLL FOR NEXT