மணீஷ் சிசோடியா 
இந்தியா

சுனிதாவின் அரசியல் பயணம் விரைவில் முடிவுக்கு வரும்: சிசோடியா

தனது கணவரின் போராட்டக் குணத்தை மிகவும் நேர்த்தியாக மக்களுக்கு எடுத்துரைத்தவர்..

பிடிஐ

சுனிதா கேஜரிவாலின் அரசியல் பயணம் விரைவில் முடிவுக்கு வரும் என மணீஷ் சிசோடியா தெரிவித்துள்ளார்.

மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் அரவிந்த் கேஜரிவால் சிறையில் உள்ள நிலையில், கடந்த வாரம் உச்ச நீதிமன்றத்தால் ஜாமீன் பெற்ற மணீஷ் சிசோடியாக திகார் சிறையிலிருந்து வெளியே வந்தார்.

ஆத் ஆத்மி தலைமையகத்தில் செய்தியாளர்களுடன் சந்திப்பில் அவர் பேசியது..

கலால் கொள்கை வழக்கு தொடர்பாக கடந்த மார்ச் 21ல் கேஜரிவால் கைது செய்யப்பட்ட பிறகு சுனிதா அவருக்கும் கட்சிக்கும் இடையே ஒரு பாலமான பணியாற்றினார். மேலும் தில்லி, குஜராத் மற்றும் ஹரியாணாவில் மக்களவைத் தேர்தலுக்கான ஆம் ஆத்மியின் பிரசாரத்திலும் முக்கிய பங்கு வகித்தார்.

தான் சிறையிலிருந்தபோது, கட்சி எவ்வாறு செயல்படுகிறது என்பதையும், கேஜரிவால் கைது செய்யப்பட்டதையடுத்து உண்மையில் என்ன நடக்கும் என்பதையும் அறிந்திருந்ததாக அவர் கூறினார்.

டிவியைப் பார்க்கும்போது, மொத்தக் கட்சியும் போய்விட்டது போலவும், எல்லாத் தலைவர்களும் ஓரிடத்தில் இருப்பதாவும், சுனிதா கேஜரிவால் முதல்வராகப் போகிறார் என்றும், அவரது பதவிப் பிரமாணம் மட்டும் எஞ்சியிருந்தது என்றும் தோன்றியது. அப்படித்தான் கணிப்புகள் வெளிவந்தன.

சுனிதா கேஜரிவால் நன்கு படித்தவர். நன்னடத்தை மற்றும் அனுபவமுள்ள பெண். நெருக்கடி நேரத்தில் கட்சிக்கு அவர் தேவை. தனது போராளி கணவர் சிறையில் அடைக்கப்பட்ட நேரத்தில் கட்சிக்கு மக்களைச் சென்றடையக்கூடிய ஒருவர் தேவைப்பட்டார். மேலும் அவர் கேஜரிவாலின் நம்பகமான உணர்ச்சிகரமானவராக மாறினார்.

கடந்த மார்ச் மாதம் சுனிதா கெஜ்ரிவால் ராம்லீலா மைதானத்தில் இந்தியா கூட்டணியின் பேரணியில் உரையாற்றினார். ஏப்ரலில் ராஞ்சி பேரணியில் கலந்துகொண்டார். தொலைக்காட்சியில் சுனிதா பேசுவதைப் பார்த்து நான் மிகவும் அதிசயித்துப் போனேன்.

சிறையில் இருக்கும் தனது கணவரின் போராட்டக் குணத்தை மிகவும் நேர்த்தியாக மக்களுக்கு எடுத்துரைத்ததை நினைத்து நான் மிகவும் பெருமைப்படுகிறேன்.

சுனிதா கேஜரிவாலின் எதிர்கால அரசியல் பற்றிக் கேட்டபோது, அரவிந்த் கேஜரிவால் வெளியே வந்தவுடன் இந்த அரசியல் பயணம் முடிவுக்கு வரலாம் என்று அவர் கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தேவா யாருன்னு தெரிஞ்சும் விளையாடறானுங்க... கூலி டிரைலர்!

நகையை பறித்து தப்பிச்சென்றபோது கார் மீது இருசக்கர வாகனம் மோதல்: சிறுவன் பலி, 8 பேர் காயம்

21 ரன்களில் மிகப் பெரிய சாதனையை தவறவிட்ட ஷுப்மன் கில்!

உள்ளிருந்தும் ஒளிர்கிறேன்... கமல் பதிவு!

சிந்தும் ஓவியம்... யாஷிகா ஆனந்த்!

SCROLL FOR NEXT