விவேக் சர்மா.  
இந்தியா

பஞ்சாபில் காங்கிரஸ் எம்எல்ஏ மீது மர்ம நபர்கள் தாக்குதல்

பஞ்சாபில் காரில் சென்றுகொண்டிருந்த காங்கிரஸ் எம்எல்ஏ மீது மர்ம நபர்கள் தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

DIN

பஞ்சாபில் காரில் சென்றுகொண்டிருந்த காங்கிரஸ் எம்எல்ஏ மீது மர்ம நபர்கள் தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஹிமாசல் மாநிலம், குட்லேஹர் தொகுதியின் காங்கிரஸ் எம்எல்ஏ விவேக் சர்மா. இவர் ஜலந்தரில் இருந்து காரில் தனது சொந்த கிராமத்திற்கு சென்று கொண்டிருந்தார்.

அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் அவரது காரை இரும்பு கம்பியால் தாக்கியுள்ளனர். மேலும் காரின் பின்புற கண்ணாடியையும் அவர்கள் உடைத்துள்ளனர்.

இதையடுத்து எம்.எல்.ஏ.வின் கார் ஓட்டுநர் இருவரையும் சிறிது தூரம் துரத்திச் சென்றிருக்கிறார். இருப்பினும் அவர்கள் அங்கிருந்து தப்பிச்சென்றனர்.

இதுகுறித்து வழக்கு பதிவு செய்த காவல் துறையினர் தாக்குதல் நடத்திய மர்ம நபர்களை தேடி வருகின்றனர். இச்சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது பரபரப்பு காணப்பட்டது.

பஞ்சாபில் முதல்வர் பகவந்த் மான் தலைமையில் ஆம்ஆத்மி ஆட்சி நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஆட்சியா் அலுவலகத்தில் கல்விக் கடன் முகாம்: 22 மாணவா்களுக்கு ரூ.2.32 கோடி கடன் உதவி

மயிலக்கா

உத்தமபாளையம் அருகே வாலிபருக்கு கத்திக்குத்து: ஒருவா் கைது

காரைக்குடி ரயில் நிலையத்தில் ரயில்வே கோட்ட மேலாளா் ஆய்வு

தூய செங்கோல் மாதா சப்பர பவனித் திருவிழா

SCROLL FOR NEXT