ராகுல் பகிர்ந்த படம் 
இந்தியா

தொழில்நுட்ப திட்டங்கள்: ராகுலை சந்தித்த ஃபாக்ஸ்கான் நிர்வாகி

நாட்டின் எதிர்கால தொழில்நுட்ப திட்டங்கள் குறித்து ஃபாக்ஸ்கான் நிர்வாகியுடன் ஆலோசித்ததாக ராகுல் கூறியுள்ளார்.

DIN

மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியை, இந்தியா வந்திருக்கும் ஃபாக்ஸ்கான் நிர்வாகி யங் லியூ இன்று நேரில் சந்தித்துப்பேசினார்.

இந்தியா மற்றும் உலகளவில் மேற்கொள்ளப்படவிருக்கும் தொழில்நுட்ப திட்டங்கள் குறித்து இருவரும் ஆலோசனை நடத்தியதாகத் தகவல்.

சந்திப்பு குறித்து தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் ராகுல் பதிவிட்டிருப்பதாவது, ஃபாக்ஸ்கான் நிர்வாகி யங் லியூவை சந்தித்ததில் பெரும் மகிழ்ச்சி. இந்தியா மற்றும் உலகளவில் எதிர்காலத்தில் மேற்கொள்ளபடவிருக்கும் தொழில்நுட்ப திட்டங்கள் குறித்து விரிவாக ஆலோசனை நடத்தினோம் என்று பதிவிட்டுள்ளார்.

உரிய முனைப்புடன், இந்தியாவின் தொழில்நுட்ப தொழிற்துறை, மிகச் சிறப்பான ஓரிடத்தை அடைந்துவிடும் என்றும் காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரான ராகுல் தெரிவித்துள்ளார்.

இந்தியா வந்திருக்கும் யங் லியுவிற்கு, நாட்டிலேயே மிக உயரிய விருதிகளில் மூன்றாம் இடத்தைப் பிடித்திருக்கும் பத்ம பூஷண் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது.

ஃபாக்ஸ்கான் ஆலையானது, இந்தியாவில் ஆப்பிள் ஐஃபோன்களை தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது. இது நாடு முழுவதும் சுமார் 40 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பை வழங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும், இந்த நிறுவனமானது, இந்தியாவில் ஐஃபோன் தயாரிப்புப் பணியை விரிவுபடுத்த திட்டமிட்டுள்ளது, எச்சிஎல் குழுமத்துடன் இணைத்து சிப் தயாரிக்கும் தொழிற்சாலையை அமைக்கவும், மின்னணு வாகனங்களின் தயாரிப்பில் ஈடுபடவும் திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

விற்பனைக்கு வரும் அகல் விளக்குகள் - புகைப்படங்கள்

உணவு தருவதாகக் கூறி... காரில் 7 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை!

டார்ஜிலிங்கில் கனமழையால் நிலச்சரிவு - புகைப்படங்கள்

மகளிர் உலகக்கோப்பை: பாக். எதிராகப் போராடி ரன் சேர்த்த இந்தியா! 248 ரன்கள் இலக்கு!

மழைநீர் வடிகால் பணிகளை நேரில் ஆய்வு செய்த முதல்வர்!

SCROLL FOR NEXT