முகப்பு
இந்தியா

விவசாயிகளின் அடித்தளம் இல்லாமல் எதையும் கட்டமைக்க முடியாது: ராகுல்!

இந்திய விவசாயிகளைத் தியாகம் செய்வது பற்றி..

Updated On : 26 பிப்ரவரி, 2026 at 6:34 PM
ராகுல் காந்தி - கோப்புப் படம்
பகிர்:
Updated On : 26 பிப்ரவரி, 2026 at 5:25 PM

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் எப்ஸ்டீன் கோப்புகளைப் பயன்படுத்தி இந்திய விவசாயிகளைத் தியாகம் செய்யும் வர்த்தக ஒப்பந்தத்தில் கையெழுத்திடப் பிரதமர் நரேந்திர மோடியை அச்சுறுத்தியதாக மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி குற்றம் சாட்டினார்.

கேரள மாநிலம் கண்ணூரின் பேராவூரில் நடந்த விவசாயிகள் மாநாட்டில் ராகுல் காந்தி கலந்துகொண்டு பேசினார். அப்போது அவர் பேசியதாவது,

விவசாயிகளும், விவசாயமும் நம் இந்தியாவின் அடித்தளம் என்ற எளிய உண்மையை மத்திய அரசால் புரிந்துகொள்ள முடியவில்லை. தகவல் தொழில்நுட்பம் மற்றும் பிற அனைத்தையும் பற்றி நீண்ட சொற்பொழிவுகள் வழங்கப்படுகின்றன.

Advertisement

Updated On : 26 பிப்ரவரி, 2026 at 6:26 PM

இந்திய விவசாயிகளின் அடித்தளம் இல்லாமல் எதையும் கட்டமைக்க முடியாது. விவசாயிகள் மதிக்கப்பட வேண்டும், பாதுகாக்கப்பட வேண்டும், அப்போதுதான் இந்தியா வெற்றி பெற முடியும்.

சோயா பீன்ஸ், சோளம், பழங்கள் போன்றவை இந்தியாவில் விற்க அமெரிக்க விவசாயிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. முன்னதாக எந்த இந்தியப் பிரதமரும் இதனைச் செய்திருக்கமாட்டார்கள். கடந்த நான்கு மாதங்களாகவே இந்தியா - அமெரிக்கா ஒப்பந்தம் தடைப்பட்டு இருந்தது. அமெரிக்க நிறுவனங்களுக்கு இந்திய விவசாய சந்தையைத் திறந்துவிட அனுமதிக்கவில்லை.

பிரதமரை சிக்கவைத்த இரண்டு விஷயங்களைப் பற்றி நான் பேசப்போகிறேன் என்பதற்காக நாடாளுமன்றத்தில் என்னைப் பேச அனுமதிக்கவில்லை. இவ்வாறு அவர் பேசினார்.

summary

Congress leader Rahul Gandhi on Thursday alleged that US President Donald Trump had used the 'Epstein files' to threaten Prime Minister Narendra Modi into signing a trade deal that would "sacrifice" Indian farmers.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.