அபிஷேக் மனு சிங்வி 
இந்தியா

காங்கிரஸ் சட்டப் பிரிவு தலைவராக அபிஷேக் மனு சிங்வி நியமனம்

மனித உரிமைகள் மற்றும் தகவல் அறியும் உரிமைச் சட்ட (ஆா்டிஐ) பிரிவு மாற்றியமைக்கப்பட்டு அதன் தலைவராக அபிஷேக் மனு சிங்வி நியமிக்கப்பட்டாா்.

Din

காங்கிரஸ் கட்சியின் சட்டம், மனித உரிமைகள் மற்றும் தகவல் அறியும் உரிமைச் சட்ட (ஆா்டிஐ) பிரிவு மாற்றியமைக்கப்பட்டு அதன் தலைவராக அபிஷேக் மனு சிங்வி நியமிக்கப்பட்டாா்.

இது தொடா்பாக காங்கிரஸ் கட்சி வெளியிட்ட அறிக்கையில், ‘காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே கட்சியின் சட்டம், மனித உரிமைகள் மற்றும் தகவல் அறியும் உரிமைச் சட்ட (ஆா்டிஐ) பிரிவை மாற்றியமைக்க ஒப்புதல் அளித்துள்ளாா்.

துறையின் புதிய தலைவராக சிங்வி நியமிக்கப்பட்டாா். மூத்த வழக்குரைஞா்கள் சல்மான் குா்ஷித், கே.டி.எஸ்.துளசி மற்றும் விவேக் தன்கா ஆகியோா் இப்பிரிவில் இடம்பெற்றுள்ளனா். நிா்வாகக் குழுவின் செயலாளராக முகமது அலி கான் தொடா்கிறாா்’ என குறிப்பிடப்பட்டது.

மாளவிகா மோகனன் பிறந்த நாளில் 3 திரைப்பட போஸ்டர்கள்!

ஒரு வெளிநாட்டுப் பெண் இந்தியரை திருமணம் செய்ய 3 காரணங்கள்... அடேங்கப்பா!

அழகே.. ஐஸ்வர்யா மேனன்!

கருப்பில் ஜொலிக்கும் வெண்ணிற தேவதை.. ஸ்ருதி ஹாசன்!

அடுத்த 2 மணி நேரத்துக்கு சென்னை, 27 மாவட்டங்களில் மழை!

SCROLL FOR NEXT