கோப்புப்படம் 
இந்தியா

கொல்கத்தா பெண் மருத்துவர் கொலை: உச்ச நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரணை

மேற்கு வங்கத்தில் மருத்துவர் கொலை வழக்கை உச்ச நீதிமன்றம் தாமாக முன் வந்த விசாரணைக்கு எடுத்தது.

DIN

மேற்கு வங்கத்தில் மருத்துவர் கொலை வழக்கை உச்ச நீதிமன்றம் தாமாக முன் வந்த விசாரணைக்கு எடுத்தது.

தலைமை நீதிபதி சந்திரசூட், நீதிபதிகள் ஜே.பி.பார்திவாலா, மனோஜ் மிஸ்ரா அமர்வு வழக்கை ஆக.20ஆம் தேதி விசாரிக்கிறது.

மேற்கு வங்கம் மாநிலம், கொல்கத்தா ஆரி.ஜி.கர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கடந்த 8-ஆம் தேதி பணியில் இருந்த முதுநிலை பெண் பயிற்சி மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, கொடூரமாக கொலைசெய்யப்பட்டார்.

இதுதொடர்பாக சஞ்சய் ராய் என்பவரை காவல்துறை கைது செய்தது. இந்த சம்பவத்தில் பலருக்கு தொடர்பு இருக்கலாம் என சந்தேகிக்கப்படும் நிலையில், கொல்கத்தா உயர்நீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து இந்த வழக்கை சிபிஐ விசாரித்து வருகிறது.

இதனிடையே, பெண் மருத்துவர் படுகொலைக்கு கண்டனம் தெரிவித்து நாடு முழுவதும் போராட்டங்கள் நடந்து வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அங்கன்வாடி பணியாளா் வீட்டில் 3 சவரன் நகை, ரொக்கம் திருட்டு

கோல்டன் கேட்ஸ் மெட்ரிக் பள்ளி விளையாட்டு விழா

வாழ்க்கைதான் யோசிக்கவே முடியாத சினிமா!

சட்ட விரோதமாக குட்கா விற்ற 9 கடைகளுக்கு ‘சீல்’

தீயில் கருகிய காா்: உயிா் தப்பிய 3 போ்

SCROLL FOR NEXT