சூர்யகுமார் யாதவ் 
இந்தியா

உங்கள் வீட்டு ஆண்களுக்கு ஒழுக்கத்தை கற்றுக்கொடுக்கவும்! -சூர்யகுமார் யாதவ்

உங்கள் வீட்டு ஆண்களுக்கு ஒழுக்கத்தை கற்றுக்கொடுக்கவும்! -சூர்யகுமார் யாதவ்

DIN

கொல்கத்தாவில் உள்ள ஆர்.ஜி. கர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், மருத்துவ மேற்படிப்பு பயிற்சி பெற்று வந்த 31 வயதான பெண் மருத்துவர் ஒருவர் பாலியல் வன்கொடுமைக்குள்ளாக்கப்பட்டு, கொடூரமான முறையில் கொல்லப்பட்ட சம்பவம் ஒட்டுமொத்த மருத்துவ உலகையும் பேரதிர்ச்சிகுள்ளாக்கியுள்ளது.

கொல்கத்தாவில் பெண் மருத்துவர் பாலியல் கொலையைத் தொடர்ந்து, மருத்துவர்களின் பாதுகாப்பை வலியுறுத்தி மருத்துவர்களுக்கு ஆதரவாக பல்வேறு பகுதிகளிலும் போராட்டம் தீவிரமடைந்துள்ளது.

இந்த நிலையில், கொல்கத்தாவில் பெண் மருத்துவர் பாலியல் கொலை செய்யப்பட்ட சம்பவத்தை சுட்டிக்காட்டி, இந்திய டி20 கிரிக்கெட் அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவ் இன்ஸ்டாகிராம் சமூக வலைதளத்தில் கருத்து தெரிவித்து கவனத்தை ஈர்த்துள்ளார்.

தனது இன்ஸ்டா பக்கத்தில் அவர் கூறியிருப்பதாவது, ‘உங்கள் மகளை பாதுகாக்க வேண்டும் என சொல்லாதீர், மாறாக, உங்கள் மகன், தந்தை, கணவன், சகோதரர்கள், நண்பர்கள் ஆகியோருக்கு ஒழுக்கத்தை கற்றுக்கொடுங்கள்’ எனப் பதிவிட்டுள்ளார்.

அவருடைய இந்த பதிவு, எண்ணற்ற இளைஞர்களின் கவனத்தை ஈர்க்கும் விதமாய் அமைந்துள்ளதுடன் விழிப்புணர்வையும் ஏற்படுத்தியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

புதிய பொறுப்பு காத்திருக்கிறது இவர்களுக்கு: தினப்பலன்கள்!

பாலியல் தொல்லையால் பாா்வையற்றோா் பள்ளி மாணவி மரணமா?

அமெரிக்க வரி எதிரொலி: ஏற்றுமதி ரக இறால் உள்ளூரில் விற்பனை தொடக்கம்

வாய்க்காலில் விழுந்து மதுபானக் கடை மேற்பாா்வையாளா் உயிரிழப்பு

காதல் விவகாரத்தில் இளைஞா் கொலை: 5 போ் கைது!

SCROLL FOR NEXT