தில்லியில் மருத்துவர்கள் போராட்டம் PTI
இந்தியா

தில்லியில் தொடரும் மருத்துவர்கள் போராட்டம்: நோயாளிகள் அவதி!

மேற்கு வங்க பெண் மருத்துவர் கொலை விவகாரத்தில் தில்லியில் போராட்டம் தொடர்வதால் நோயாளிகள் அவதிக்கு ஆளாகியுள்ளனர்.

DIN

மேற்கு வங்க பெண் மருத்துவர் கொலை விவகாரத்தில் தில்லியில் போராட்டம் தொடர்வதால் நோயாளிகள் அவதிக்கு ஆளாகியுள்ளனர்.

மேற்கு வங்கம் மாநிலம், கொல்கத்தா ஆர்.ஜி.கர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கடந்த ஆக. 8-ம் தேதி பணியில் இருந்த முதுநிலை பெண் பயிற்சி மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, கொடூரமாக கொலை செய்யப்பட்டார்.

இதுதொடர்பாக சஞ்சய் ராய் என்பவரை காவல்துறை கைது செய்தது. இந்த சம்பவத்தில் பலருக்கு தொடர்பு இருக்கலாம் என சந்தேகிக்கப்படும் நிலையில், கொல்கத்தா உயர்நீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து வழக்கை சிபிஐ விசாரித்து வருகிறது.

மருத்துவமனையில் விசாரணை மேற்கொண்ட சிபிஐ அதிகாரிகள், கொலை செய்யப்பட்ட பயிற்சி மருத்துவரின் வீட்டிற்கு சென்று இன்று விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

இதனிடையே, பெண் மருத்துவர் படுகொலைக்கு கண்டனம் தெரிவித்து நாட்டில் பல்வேறு பகுதிகளில் போராட்டங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

தில்லியில் மருத்துவர்கள் இன்று 8-வது நாளாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். பல்வேறு மருத்துவமனைகளைச் சேர்ந்த மருத்துவர்கள் இணைந்து பேரணியில் ஈடுபட்டனர்.

பயிற்சி மருத்துவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் அரசு மருத்துவக் கல்லூரிகள் செயல்படவில்லை, மருத்துவமனைகளில் புறநோயாளிகள் பிரிவில் சிகிச்சை அளிக்கப்படவில்லை என்பதால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வாக்கு வங்கியை அதிகரிக்க பாஜக தில்லுமுல்லு: அமைச்சா் துரைமுருகன்

இசையே முக்கியம்...

விவசாயம் சார்ந்த கதை

அரசு வேலை வாங்கித் தருவதாக ரூ.20.70 லட்சம் மோசடி

பேல் பூரி

SCROLL FOR NEXT