dotcom
இந்தியா

மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு அபிஷேக் சிங்வி மனு தாக்கல்!

காங்கிரஸ் மூத்த தலைவர் அபிஷேக் மனு சிங்வி, மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு மனு தாக்கல் செய்துள்ளார்.

DIN

காங்கிரஸ் மூத்த தலைவர் அபிஷேக் மனு சிங்வி, மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு மனு தாக்கல் செய்துள்ளார்.

மாநிலங்களவையில் காலியாக உள்ள 12 இடங்களுக்கு வருகிற செப். 3 ஆம் தேதி தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

இந்நிலையில் காங்கிரஸ் மூத்த தலைவரும் வழக்கறிஞருமான அபிஷேக் சிங்வி, தெலங்கானாவில் இருந்து மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு இன்று(ஆக. 19) மனு தாக்கல் செய்துள்ளார்.

முதல்வர் ரேவந்த் ரெட்டி, துணை முதல்வர் மல்லு பாட்டி விக்ரமார்கா, அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள், எம்.எல்.சி.க்கள், எம்.பி.க்கள் என தெலங்கானா காங்கிரஸ் பிரிவைச் சேர்ந்த முக்கிய பிரமுகர்கள் உடன் சென்றிருந்தனர்.

கட்சியின் மாநில பொறுப்பாளர் தீபா தாஸ் முன்ஷியும் கலந்து கொண்டார்.

அபிஷேக் சிங்வி, ராஜஸ்தான் மாநிலத்தில் இருந்து இரு முறையும், (2006-18) மேற்குவங்கத்தில் இருந்து ஒரு முறையும்(2018-24) மாநிலங்களவை உறுப்பினர் ஆகியுள்ளார்.

தற்போது 4 ஆவது முறையாக அவர் மாநிலங்களவை எம்.பி. யாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மேட்டூர் அணை நீர்வரத்து: இன்றைய நிலவரம்!

சென்னையில் விடிய, விடிய பெய்த கனமழை! மயிலாப்பூரில் 80 மீ.மி. மழை பதிவு!

ஃபிடே செஸ்: தமிழக வீராங்கனைக்கு முதல்வா் வாழ்த்து

அண்ணா பிறந்த நாள்: எடப்பாடி பழனிசாமி தலைமையில் மரியாதை

4 ஆண்டுகளில் 33,987 பேருக்கு பணி நியமன ஆணை: அமைச்சா் மா.சுப்பிரமணியன்

SCROLL FOR NEXT