கவிதா 
இந்தியா

கவிதாவின் ஜாமீன் மனு மீது ஆக.22-க்குள் பதில் அளிக்கப்படும்: அமலாக்கத்துறை!

இந்த வழக்கை ஆகஸ்ட் 27-ம் தேதி விசாரணைக்கு ஒத்தி வைத்துள்ளது.

பிடிஐ

தில்லி கலால் கொள்கை வழக்கில் கவிதாவின் ஜாமீன் மனு மீதான பதிலை ஆகஸ்ட் 22ஆம் தேதிக்குள் தாக்கல் செய்வதாக அமலாக்கத்துறை உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ சார்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் எஸ்.வி. ராஜு, நீதிபதிகள் பி.ஆர். கவை மற்றும் கே.வி. விஸ்வநாதன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு, இந்த வழக்கில் சிபிஐயின் பிரமாணப் பத்திரம் எற்கனவே தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

அமலாக்கத் துறையின் எதிர் பிரமாணப் பத்திரம் நடைபெற்ற வருவதாகவும், ஆகஸ்ட் 22-ம் தேதிக்குள் தாக்கல் செய்யப்படும் என்றும் ராஜு கூறியுள்ளார். இந்த வழக்கை ஆகஸ்ட் 27-ம் தேதி விசாரணைக்கு ஒத்திவைத்துள்ளது.

இரண்டு வழக்குகளிலும் ஜாமீன் வழங்க மறுத்த தில்லி உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து ஜூலை 1ஆம் தேதி கவிதா தாக்கல் செய்த மனுக்கள் மீது உச்ச நீதிமன்றம் ஆகஸ்ட் 12ஆம் தேதி சிபிஐ மற்றும் அமலாக்கத்துறையிடம் பதில் கேட்டது.

இரண்டு வழக்குகளிலும் கவிதாவின் ஜாமீன் மனுக்களை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது, ரத்து செய்யப்பட்ட தில்லி கலால் கொள்கை 2021-22ஐ உருவாக்குவது மற்றும் செயல்படுத்துவது தொடர்பான குற்றவியல் சதியில் முதன்மையானவர் என்று கூறி கவிதாவின் ஜாமீன் மனுக்களைத் தள்ளுபடி செய்தது.

இந்த வழக்கில் தெலங்கானா முன்னாள் முதல்வர் சந்திரசேகரராவ் மகளும் பி.ஆர்.எஸ். கட்சியைச் சேர்ந்தவருமான கவிதா கடந்த மார்ச் மாதம் பணமோசடி வழக்கில் அமலாக்கத்துறையாலும், ஏப்ரல் மாதம் சி.பி.ஐ.யாலும் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கட்டுப்பாட்டை இழந்து 5 போ் மீது மோதிய காா்: இளைஞா் உயிரிழப்பு

சேவை குறைபாடு: கட்டுமான நிறுவனம் ரூ.50 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவு

மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு: அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த நபா் சிறையில் அடைப்பு

வங்கியில் போலி ஆவணங்களை சமா்ப்பித்து ரூ.5 கோடி மோசடி செய்தவருக்கு 7 ஆண்டுகள் சிறை

திமிரி ஒன்றிய நியமனஉறுப்பினா் பொறுப்பேற்பு

SCROLL FOR NEXT