ம.பி. முதல்வர் மோகன் யாதவ் கோப்புப்படம்
இந்தியா

மாதத்தில் ஒரு நாள் மாவட்டத்தில் தங்க வேண்டும்: அமைச்சர்களுக்கு ம.பி. முதல்வர் உத்தரவு

மத்திய பிரதேச அமைச்சர்களுக்கு பொறுப்பு மாவட்டங்கள் வழங்கி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

DIN

மத்திய பிரதேச அமைச்சர்கள் மாதத்தில் ஒரு நாள் பொறுப்பு மாவட்டங்களில் தங்க வேண்டும் என்று முதல்வர் மோகன் யாதவ் உத்தரவிட்டுள்ளார்.

கடந்த ஆகஸ்ட் 17ஆம் தேதி மாநில அமைச்சர்களுக்கு பொறுப்பு மாவட்டங்கள் அறிவிக்கப்பட்ட நிலையில், இந்த உத்தரவை முதல்வர் பிறப்பித்துள்ளார்.

மாநில அமைச்சரவையில் உள்ள பெரும்பாலான அமைச்சர்களுக்கு இரண்டு மாவட்டங்கள் பொறுப்பு மாவட்டங்களாக வழங்கப்பட்டுள்ளது.

மத்திய பிரதேசத்தின் பொருளாதார தலைநகரான இந்தூர் மாவட்டத்துக்கு முதல்வர் மோகன் யாதவ் பொறுப்பேற்றுள்ளார்.

துணை முதல்வர் ஜகதீஷ் தேவ்தாவுக்கு ஜபல்பூர் மற்றும் தேவாஸ் மாவட்டங்களும், மற்றொரு துணை முதல்வர் ராஜேந்திர சுக்லாவுக்கு சாகர் மற்றும் ஷஹதோல் மாவட்டங்கள் பொறுப்பாக வழங்கப்பட்டுள்ளது.

மேலும், பாஜகவின் மூத்த தலைவரும் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சருமான கைலாஷ் விஜயவர்கியாவுக்கு சட்னா மற்றும் தர் மாவட்டங்கள் வழங்கப்பட்டுள்ளது.

அனைத்து அமைச்சர்களும் தங்களின் பொறுப்பு மாவட்டங்களில் மாதத்தில் ஒரு இரவாவது தங்கி, ஆய்வு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வழிபாட்டுக்கு 500 விநாயகா் சிலைகள்

புதுவையில் திமுக மாடல் ஆட்சி அமையும்: தமிழக அமைச்சா் டி.ஆா்.பி. ராஜா நம்பிக்கை

பெங்களூா் நிறுவனத்துக்கு வோ் ஊக்கி மருந்து அளிக்க புதுவை வேளாண் விஞ்ஞானி முடிவு

ரெயின்போ நகா் புனித ஜான் மரி வியான்னி ஆலயத்தில் ஆண்டு விழா

வீட்டை இடித்தவா்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி தொழிலாளி போராட்டம்

SCROLL FOR NEXT