தேசியவாத காங்கிரஸ் நிறுவனரும் மகாராஷ்டிர முன்னாள் முதல்வருமான சரத் பவாருக்கு (83) மத்திய உள்துறை அமைச்சகம் ‘இஸட் பிளஸ்’ பாதுகாப்பு வழங்கியுள்ளது.
அவருக்கான அச்சுறுத்தலை கருத்தில் கொண்டு, ‘இஸட் பிளஸ்’ பாதுகாப்பு வழங்க மத்திய முகமைகள் பரிந்துரைத்ததாக அதிகாரபூா்வ வட்டாரங்கள் தெரிவித்தன.
அதன்படி, மத்திய ரிசா்வ் போலீஸ் படையின் (சிஆா்பிஎஃப்) ஆயுதமேந்திய 55 வீரா்கள் அடங்கிய குழு சுழற்சி முறையில் பவாருக்கு பாதுகாப்பு அளிக்கவுள்ளது.
மிக முக்கிய பிரமுகா்களுக்கான பாதுகாப்பு 5 பிரிவுகளின்கீழ் வழங்கப்படுகிறது. இதில் மிக உயரிய பாதுகாப்பு இஸட் பிளஸ் ஆகும். அடுத்தடுத்து இஸட், ஒய் பிளஸ், ஒய், எக்ஸ் ஆகிய பிரிவுகளின்கீழ் பாதுகாப்பு வழங்கப்படுகிறது.