முகப்பு
இந்தியா

வெறுப்பை ஒழிப்போம்: ஜம்மு-காஷ்மீரில் ராகுல் பேச்சு!

ஜம்மு-காஷ்மீர் ஸ்ரீநகரில் நடைபெற்ற காங்கிரஸ் தொண்டர்கள் கூட்டத்தில் ராகுல் காந்தி பேசியதாவது...

Updated On : 22 ஆகஸ்ட், 2024 at 1:32 PM
ஜம்மு-காஷ்மீரில் ராகுல் காந்தி - INC Twitter
பகிர்:
Updated On : 22 ஆகஸ்ட், 2024 at 12:57 PM

அன்பின் மூலமாக இந்த உலகில் வெறுப்பை ஒழிப்போம் என்றும் ஜம்மு-காஷ்மீர் மக்களின் அச்சத்தைப் போக்குவதே எங்களின் நோக்கம் என்றும் ராகுல் காந்தி பேசினார்.

ஜம்மு-காஷ்மீர் மாநிலம் ஸ்ரீநகரில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தலைமையில் காங்கிரஸ் தொண்டர்கள் கூட்டம் நடைபெற்று வருகிறது.

ஜம்மு -காஷ்மீருக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் இருநாள் பயணமாக காங்கிரஸ் தலைவர்கள் அங்கு சென்றுள்ளனர்.

Advertisement

இன்றைய கூட்டத்தில் பேசிய மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, 'மக்களவைத் தேர்தலின்போது இந்தியா கூட்டணி, நரேந்திர மோடியின் நம்பிக்கையை அழித்துவிட்டது. அவர் ராகுல் காந்தியால் தோற்கடிக்கப்படவில்லை, காங்கிரஸ் கட்சியின் கொள்கை, இந்தியா கூட்டணி, அன்பு, ஒற்றுமை, மரியாதை ஆகியவற்றால் தோற்கடிக்கப்பட்டார்.

Updated On : 22 ஆகஸ்ட், 2024 at 12:50 PM

ஜம்மு-காஷ்மீர் மக்களுக்குச் சொல்ல விரும்புவது என்னவென்றால், வெறுப்பு மிக்க உலகில் அன்பைக் காட்ட வேண்டும். வெறுப்பினை அன்பினால் தோற்கடிக்க முடியும். நாமெல்லாம் சேர்ந்து அன்பினால் வெறுப்பினை ஒழிப்போம்.

ஜம்மு-காஷ்மீர் மக்களின் பிரதிநிதித்துவம், அவர்களின் மாநிலம் மிக முக்கியமான விஷயம் என்பதால் இங்கு வந்துள்ளோம்.

Updated On : 22 ஆகஸ்ட், 2024 at 1:26 PM

இந்திய வரலாற்றில் சுதந்திரத்திற்குப் பின்னர், யூனியன் பிரதேசங்கள் எல்லாம் மாநிலங்களாக மாற்றப்பட்டபோது, ஒரு மாநிலம் யூனியன் பிரதேசமானது. இதுபோன்று முன்னதாக நடக்கவில்லை. எனவேதான் ஜம்மு-காஷ்மீர் மக்கள், எங்களுக்கும் இந்த நாட்டுக்கும் முக்கியம்.

ஜம்மு-காஷ்மீர் மக்களின் அச்சத்தைப் போக்குவதே எங்களின் நோக்கம்' என்று பேசினார்.

கார்கே பேசும்போது, 'ஜம்மு-காஷ்மீர் தேர்தலில் வெற்றி பெற்றால், ஒட்டுமொத்த இந்தியாவும் நம் கட்டுப்பாட்டிற்குள் வந்துவிடும். ராகுல் காந்தி கூறியதுபோல, ஜம்மு-காஷ்மீர் உடனான அவரது நட்பு விருப்பு, வெறுப்பு மட்டுமின்றி ரத்தத்தில் கலந்தது. வரவிருக்கும் தேர்தலில் ஜம்மு-காஷ்மீர் மக்கள் எங்களுடன் நிற்பார்கள் என்று நம்புகிறோம்.

Updated On : 22 ஆகஸ்ட், 2024 at 1:29 PM

தேர்தலை எங்கு, எப்போது தொடங்க வேண்டும் என்பதை பாஜகதான் தீர்மானிக்கிறது. அவர்களின் கோபம், விரக்தி அனைத்தும் காங்கிரஸை மட்டுமே குறிவைக்கிறது. ஏனெனில் வேறு எந்த கட்சியும் அவர்களுக்கு எதிராக கடுமையான போரிடவில்லை. பாஜகவுக்கு எதிராக போராடத் துணிந்த ஒரே நபர் ராகுல் காந்தி. நாட்டைக் காப்பாற்றவும் உங்கள் கலாசாரம், உரிமைகளைக் காப்பாற்றவும் உங்களுடைய வாக்குகள் எங்களுக்குத் தேவை' என்று பேசினார்.

ஜம்மு -காஷ்மீருக்கு வருகிற செப்டம்பர் 18, 25, அக்டோபர் 1 தேதிகளில் மூன்று கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது. அக்டோபர் 4 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.