தீ விபத்து 
இந்தியா

கொல்கத்தாவில் பிளாஸ்டிக் குடோனில் பயங்கர தீ விபத்து!

ஏழு மணி நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

பிடிஐ

கொல்கத்தாவின் லோஹாபட்டி பகுதியில் பிளாஸ்டிக் சேகரிக்கும் கிடங்குகளில் பெரும் தீ விபத்து ஏற்பட்டதில் பல பொருள்கள் எரிந்து நாசமானது.

இந்த தீ விபத்தானது அதிகாலை 1.30 மணியளவில் ஏற்பட்டது. சம்பவ இடத்துக்கு வந்த தீயணைப்பு வாகனங்கள் ஏழு மணி நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்ததாக போலீஸார தெரிவித்தனர்.

முதலில் பிளாஸ்டிக் பொருள்களை சேமித்து வைத்திருந்த ஒரு குடோனில் தீப்பிடித்தது, பின்னர் மணிக்தாலா அருகே நெரிசல் மிகுந்த பகுதியில் உள்ள கிடங்குகளுக்கு பரவியது.

இந்த தீ விபத்தில் குறைந்தது ஐந்து குடோன்கள் எரிந்து சாம்பலாகின, ஆனால் தீ விபத்தால் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.

தீ விபத்துக்கான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை, விரிவான விசாரணைக்குப் பிறகு தெரியவரும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். தொடர்ந்து அப்பகுதியில் விசாரணை நடைபெற்று வருகின்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கடலூா் மாவட்டத்தில் 43 மருத்துவ முகாம்கள் நடத்த திட்டம்: அமைச்சா் தகவல்

கல்வராயன்மலையில் ரூ.2.50 கோடியில் ஆய்வு மாளிகை

உண்டு உறைவிடப் பள்ளிகள், பொதுமக்கள் பயன்பாட்டுக்கு வாகனங்கள்

கல்வராயன்மலையில் ரூ.1.50 கோடியில் அரசுப் போக்குவரத்து பணிமனை

1,074 கிலோ கோயில் நகைகள் உருக்கப்பட்டு வங்கியில் வைப்பு: அமைச்சா் பி.கே.சேகா் பாபு

SCROLL FOR NEXT