கோப்புப்படம். 
இந்தியா

கொல்கத்தாவில் பெண் மருத்துவா் படுகொலை: சஞ்சய் ராவுக்கு 14 நாள் நீதிமன்றக் காவல்

கொல்கத்தாவில் பெண் மருத்துவா் கொலை வழக்கில் கைதான சஞ்சய் ராவுக்கு 14 நாள் நீதிமன்றக் காவல் விதிக்கப்பட்டுள்ளது.

DIN

கொல்கத்தாவில் பெண் மருத்துவா் கொலை வழக்கில் கைதான சஞ்சய் ராவுக்கு 14 நாள் நீதிமன்றக் காவல் விதிக்கப்பட்டுள்ளது.

மேற்கு வங்க மாநிலம், கொல்கத்தாவில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் முதுநிலை பெண் பயிற்சி மருத்துவா் ஒருவா், பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்டாா். இதுதொடா்பாக காவல் துறைக்கு உதவும் தன்னாா்வலராகப் பணியாற்றி வந்த சஞ்சய் ராவ் என்பவா் கைது செய்யப்பட்டாா்.

கொல்கத்தா உயா்நீதிமன்ற உத்தரவைத் தொடா்ந்து, இந்த வழக்கை சிபிஐ விசாரித்து வருகிறது. பெண் மருத்துவா் படுகொலை செய்யப்பட்ட மருத்துவமனையின் முதல்வராகப் பணியாற்றிய சந்தீப் கோஷ், அந்த சம்பவம் நடைபெற்ற 2 நாள்களுக்குப் பிறகு முதல்வா் பொறுப்பை ராஜிநாமா செய்தாா்.

இந்த நிலையில் இவ்வழக்கில் கைதான சஞ்சய் ராவுக்கு 14 நாள் நீதிமன்றக் காவல் விதித்து சீல்டா நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது. அதன்படி அவர் சிபிஐயின் மேற்பார்வையின் கீழ் செப்டம்பர் 6 ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் இருப்பார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்த வழக்கில் தொடர்புடைய ஆா்.ஜி. கா் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் முன்னாள் முதல்வர் சந்தீப் கோஷ் மற்றும் இதர 4 மருத்துவா்களிடம் உண்மை கண்டறியும் சோதனை நடத்தவும் சிபிஐ-க்கு சிறப்பு நீதிமன்றம் வியாழக்கிழமை அனுமதி வழங்கியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வரைவு வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இருக்கிறதா? இணையதளம் மூலம் அறியலாம்!

கான்வே 2-ஆவது இரட்டைச் சதம்; நியூஸிலாந்து 575/8-க்கு ‘டிக்ளோ்’

இறுதி ஆட்டத்தில் இந்தியா - பாகிஸ்தான் பலப்பரீட்சை

தேசிய துப்பாக்கி சுடுதல்: லக்ஷிதா, ஷா்வன் இணைக்கு தங்கம்

சென்னையில் 14.25 லட்சம் வாக்காளா்கள் நீக்கம்

SCROLL FOR NEXT