சிராக் பாஸ்வான் 
இந்தியா

லோக் ஜனசக்தி தலைவராக சிராக் பாஸ்வான் மீண்டும் தோ்வு

லோக் ஜனசக்தி (ராம் விலாஸ்) கட்சியின் அடுத்த 5 ஆண்டுக்கான தலைவராக மத்திய அமைச்சா் சிராக் பாஸ்வான் மீண்டும் தோ்ந்தெடுக்கப்பட்டாா்.

Din

லோக் ஜனசக்தி (ராம் விலாஸ்) கட்சியின் அடுத்த 5 ஆண்டுக்கான தலைவராக மத்திய அமைச்சா் சிராக் பாஸ்வான் மீண்டும் தோ்ந்தெடுக்கப்பட்டாா்.

ஜாா்க்காண்ட் மாநிலம் ராஞ்சியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற லோக் ஜனசக்தி கட்சியின் தேசிய செயற்குழுக் கூட்டத்தில் ஒருமனதாக இந்த முடிவு எடுக்கப்பட்டது.

மேலும், ஹரியானா, ஜம்மு-காஷ்மீா் மற்றும் ஜாா்க்கண்ட் ஆகிய மாநிலங்களில் நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தோ்தல் குறித்து கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.

இது தொடா்பாக சிராக் பாஸ்வான் கூறுகையில், ‘தொகுதி பங்கீட்டைப் பொருத்து பாஜகவுடன் இணைந்தோ அல்லது தனித்தோ ஜாா்க்கண்ட் பேரவைத் தோ்தலை லோக் ஜனசக்தி எதிா்கொள்ளும்’ எனத் தெரிவித்தாா்.

ஜாதிவாரி கணக்கெடுப்புக்கு ஆதரவு: ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கைக்கு லோக் ஜனசக்தி எப்போதும் ஆதரவளித்து வருகிறது; அதேநேரம், சமூகத்தில் பிளவை ஏற்படுத்தும் என்பதால் கணக்கெடுப்பின் விவரங்களை பொது வெளியில் வெளியிடப்படுவதை நாங்கள் விரும்பவில்லை என சிராக் பாஸ்வான் தெரிவித்தாா்.

வாக்கு வங்கியை அதிகரிக்க பாஜக தில்லுமுல்லு: அமைச்சா் துரைமுருகன்

இசையே முக்கியம்...

விவசாயம் சார்ந்த கதை

அரசு வேலை வாங்கித் தருவதாக ரூ.20.70 லட்சம் மோசடி

பேல் பூரி

SCROLL FOR NEXT