முகப்பு
இந்தியா

சகோதரியின் மகளுக்கு பாலியல் வன்கொடுமை! தாய் மாமன் கைது!

உத்தரப் பிரதேசத்தில் சகோதரியின் 16 வயது மகளை பாலியல் வன்கொடுமை செய்த தாய் மாமன் கைது.

Updated On : 25 ஆகஸ்ட், 2024 at 12:31 PM
கோப்புப் படம்
பகிர்:

உத்தரப் பிரதேசத்தில் சகோதரியின் 16 வயது மகளை பாலியல் வன்கொடுமை செய்த தாய் மாமனை காவல் துறையினர் இன்று (ஆக. 25) கைது செய்தனர்.

உத்தரப் பிரதேச மாநிலம் பாலியா மாவட்டத்தின் பான்ஸ்டி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியைச் சேர்ந்தவர் லால்ஜி. 45 வயதான இவர், தனது சகோதரியின் 16 வயது மகளை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.

இது தொடர்பாக லால்ஜியின் மனைவி அளித்த புகாரின் அடிப்படையில் காவல் துறையினர் அவரை கைது செய்தனர்.

அவரிடம் நடத்தப்பட்ட விசாரணைக்குப் பிறகு பேசிய காவல் துறை கண்காணிப்பாளர் விக்ராந்த் வீர், சம்பவம் நடந்தபோது 16 வயது சிறுமி தனது சகோதர, சகோதரிகளுடன் உறங்கிக்கொண்டிருந்தார். அப்போது வீட்டின் மேற்கூரை வழியாக உள்ளே நுழைந்த லால்ஜி, 16 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார் எனக் குறிப்பிட்டார்.

பாதிக்கப்பட்ட சிறுமி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், லால்ஜியின் மனைவி கொடுத்த புகாரின் பேரில் அவர் கைது செய்யப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.