கோப்புப் படம் 
இந்தியா

10 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை: 67 வயது முதியவர் கைது!

மகாராஷ்டிரத்தில் 10 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த 67 வயது முதியவர் கைது.

DIN

மகாராஷ்டிரத்தில் 10 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த 67 வயது முதியவரை காவல் துறையினர் கைது செய்தனர்.

பள்ளியில் குட் டச், பேட் டச் குறித்து வகுப்பு நடத்தப்படும்போது சிறுமி இதனைத் தெரிவித்ததைத் தொடர்ந்து, இச்சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. பள்ளி நிர்வாகத்தினர் பெற்றோரிடம் தெரிவித்ததை அடுத்து காவல் நிலையத்தில் வழக்காக பதிவு செய்யப்பட்டது.

மகாராஷ்டிர மாநிலம் புணேவுக்கு அருகேவுள்ள கிராமப்பகுதியில் 67 வயது முதியவர் ஒருவர் சிறுமியிடம் சாக்லெட் கொடுத்து நெருக்கமாகப் பழக்கத்தை ஏற்படுத்தியுள்ளார். கடந்த வெள்ளிக்கிழமை (ஆக. 23) பள்ளி முடித்து வீடு திரும்பும்போது சிறுமியை வீட்டிற்கு அழைத்துச் சென்று பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டுள்ளார். புணே கிராமப்புற காவல் துறையினர் இதனைத் தெரிவித்தனர்.

மேலும் முதியவர் மீது போக்சோ தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், அவரிடம் மேற்கொண்டு விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும் காவல் துறையினர் தெரிவித்தனர்.

மகாராஷ்டிர மாநிலம் புணே மாவட்டத்திலுள்ள பாதல்பூர் பள்ளியில் 4ஆம் வகுப்பு பயிலும் இரு மாணவிகளிடம் அப்பள்ளி உதவியாளர் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டுள்ளார். இச்சம்பவத்தைக் கண்டித்து மாணவ, மாணவியரின் பெற்றோர்கள் பள்ளியை முற்றிகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் பள்ளி வளாகம் சூறையாடப்பட்டது.

பள்ளிகளில் பெண்களின் மாணவிகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் சிசிடிவி கேமராக்களைப் போன்று அவசர உதவி பொத்தான்களைப் பொருத்த மாநில பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் தீபக் கேசர்கர் தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

உசுரே நீதானே.... ஜனனி!

பூம்புகார் சங்கமத்துறையில் ஆடிப்பெருக்கு விழா கோலாகலம்!

தீரன் சின்னமலை நினைவு நாள்! முதல்வர் மு.க. ஸ்டாலின் மலர் தூவி மரியாதை!

விருதே வாழ்த்திய தருணம்: ஹரிஷ் கல்யாண் நெகிழ்ச்சி!

குடியரசுத் தலைவர் முர்முவுடன் பிரதமர் மோடி சந்திப்பு

SCROLL FOR NEXT