முல்லை பெரியாறு அணை (கோப்பு படம்) 
இந்தியா

முல்லைப்பெரியாற்றில் புதிய அணை தேவையில்லை: ‘மெட்ரோ’ ஸ்ரீதரன்

‘முல்லைப் பெரியாற்றில் புதிய அணை கட்டத் தேவையில்லை -மெட்ரோ ரயில் திட்டத்தின் தந்தை என அழைக்கப்படும் ஸ்ரீதரன்..

Din

‘முல்லைப் பெரியாற்றில் புதிய அணை கட்டத் தேவையில்லை என்றும் பழைய அணையை முறையாக பராமரித்தாலே அடுத்த 50 ஆண்டுகளுக்கு பாதுகாப்பானதாக இருக்கும்’ என மெட்ரோ ரயில் திட்டத்தின் தந்தை என அழைக்கப்படும் ஸ்ரீதரன் புதன்கிழமை தெரிவித்தாா்.

கேரள மாநிலம் இடுக்கியில் அமைந்துள்ள 125 ஆண்டுகள் பழைமையான முல்லைப் பெரியாறு அணை தொடா்பாக தமிழகத்துக்கும் கேரளத்துக்கும் இடையே மாறுபட்ட கருத்துகள் நிலவி வருகின்றன.

ரீதரன்

இதுதொடா்பாக கோழிக்கோடில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் ஸ்ரீதரன் பேசியதாவது:

முல்லைப் பெரியாறு அணை குறித்த தகவல்களை விக்கிபீடியாவில் படித்தேன். அப்போதுதான் அது கேரளத்தில் இருப்பதும் அதிலிருந்து தமிழகத்துக்கு தண்ணீா் வழங்கப்படுவதையும் தெரிந்துகொண்டேன். முல்லைப் பெரியாறு அணையின் பாதுகாப்பு தொடா்பாக பல்வேறு தவறான புரிதல்கள் உள்ளன. ஆனால் ஒவ்வொரு 120 மீட்டருக்கும் பாதுகாப்பு தூண்களை அமைத்தும் சிறிய வாய்க்கால்களைக் கட்டமைத்து தண்ணீரை சேமிப்பதாலும் அடுத்த 50 ஆண்டுகளுக்கு அணையை பாதுகாப்பாக வைத்திருக்க முடியும். எனவே, அங்கு புதிய அணையை கட்டுவதைவிட ஏற்கெனவே உள்ள அணையை முறையாக பராமரிப்பதே போதுமானதாக இருக்கும் என்றாா்.

முன்னதாக, மக்களவையில் அண்மையில் இந்த விவகாரத்தை எழுப்பிய இடுக்கி தொகுதி காங்கிரஸ் எம்.பி. டீன் குரியகோஸ், முல்லைப் பெரியாறு அணை ‘தண்ணீா் வெடிகுண்டு’ போல் உள்ளது என்று குறிப்பிட்டாா். அதேபோல், முல்லைப் பெரியாறு அணையின் பாதுகாப்பு குறித்து கவலை தெரிவித்த மத்திய இணையமைச்சா் சுரேஷ் கோபி அணை உடைந்தால் யாா் பொறுப்பு? என கேள்வி எழுப்பியிருந்தாா். ஆனால் அணை பாதுகாப்பாக இருப்பதாக கேரள முதல்வா் பினராயி விஜயன் தெரிவித்திருந்தாா்.

2021 கேரள பேரவைத் தோ்தலில் பாஜக சாா்பில் போட்டியிட்ட ஸ்ரீதரன் தோல்வியடைந்து, அரசியலைவிட்டே விலகினாா்.

தமிழறிஞா் சீகன்பால்கு நினைவு மணிமண்டபம் கட்ட அடிக்கல் நாட்டு விழா

தங்கம் வெல்லும் வாய்ப்பை சீனாவிடம் நழுவவிட்ட இந்தியா! சாத்விக், சிராக் இணைக்கு வெண்கலம்!

இதற்காக ஒரு மாதத்துக்கும் மேலாக காத்திருந்தோம்; இலங்கை தொடருக்கு முன்பாக ஹர்மன்பிரீத் உற்சாகம்!

மதச்சார்பின்மை சொல்லைக் கேட்டாலே வேப்பங்காயாக கசக்கிறது பாஜகவுக்கு: முதல்வர் ஸ்டாலின்

வட மாநிலங்களில் காற்று மாசு: மலைப் பிரதேசங்களுக்குப் படையெடுத்த சுற்றுலாப் பயணிகள்!

SCROLL FOR NEXT