பாகிஸ்தானில் நிலச்சரிவு 
இந்தியா

பாகிஸ்தானில் நிலச்சரிவு: ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 12 பேர் பலி!

வடக்கு பாகிஸ்தானில் ஏற்பட்ட நிலச்சரிவில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் பலியான சோகம்..

பிடிஐ

வடக்கு பாகிஸ்தானில் பெய்துவரும் கனமழையால் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 9 குழந்தைகள் உள்பட 12 பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பாகிஸ்தானில் கடந்த சில நாள்களாக கனமழை பெய்து வருகிறது. இந்த நிலையில், கைபர் பக்துன்க்வா மாகாணத்தின் அப்பர் டிர் மாவட்டத்தில் உள்ள மைதான் பகுதியில் திடீர் நிலச்சரிவு ஏற்பட்டு வீடு சரிந்துள்ளது.

இந்த சம்பவத்தில் இரண்டு பெண்கள், ஒரு ஆண், ஒன்பது குழந்தைகள் உயிரிழந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். இடிபாடுகளில் சிக்கிய 12 உடல்களும் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டுள்ளதாக சட்ட அமலாக்க அதிகாரிகள் தெரிவித்தனர்.

பாகிஸ்தானின் பருவமழை ஜூலை முதல் செப்டம்பர் வரை நீடிக்கும். இந்த நிலையில் அடுத்த 24 மணி நேரத்திற்கு நாடு முழுவதும் பலத்த காற்றுடன் கூடிய பரவலான மழை பெய்யும் என்று பாகிஸ்தான் வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

இந்த காலகட்டத்தில் சிந்து, வடகிழக்கு/தெற்கு பலுசிஸ்தான், வடகிழக்கு/மத்திய பஞ்சாப், போடோஹர் பகுதி, இஸ்லாமாபாத், கில்கிட்-பால்டிஸ்தான் மற்றும் கைபர் பக்துன்க்வா ஆகிய பகுதிகளில் கனமழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

கனமழையால் முர்ரே, கல்லியத், மன்செரா, கோஹிஸ்தான், சித்ரால், டிர், ஸ்வாட், ஷாங்லா, புனர் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் நிலச்சரிவுகள் ஏற்பட வாய்ப்புள்ளது.

மேலும், பாகிஸ்தானின் கரையோரப் பகுதிகள் சிந்து கடற்கரையை ஒட்டி வடகிழக்கு அரபிக்கடலில் புயல் ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அமெரிக்காவுடன் விரைவில் இருதரப்பு வா்த்தக ஒப்பந்தப் பேச்சுவாா்த்தை: இந்தியா நம்பிக்கை

நாளைய மின்தடை

ஆளுநா் மாளிகை சிவப்பு மண்டலமாக அறிவிப்பு

‘ஹெச்1பி’ விசா நடைமுறையில் மீண்டும் மாற்றம்: டிரம்ப் நிர்வாகம் அதிரடி

ரஷியாவின் தாக்குதலில்.. மூழ்கியது உக்ரைனின் மிகப் பெரிய கடற்படைக் கப்பல்!

SCROLL FOR NEXT