சத்தீஸ்கரில் உள்ள பிரபல தொலைத்தொடர்பு நிறுவனத்தின் மொபைல் டவருக்கு நக்சல்கள் தீவைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சத்தீஸ்கர் மாநிலம், பிஜப்பூர் மாவட்டத்தில் உள்ள பிரபல தொலைத்தொடர்பு நிறுவனத்தின் மொபைல் ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு நக்சல்கள் தீ வைத்துள்ளனர். இந்த சம்பவத்தில் டவரின் உபகரணங்கள் சேதமடைந்துள்ளதாக போலீஸார் திங்கள்கிழமை தெரிவித்தனர்.
முதற்கட்ட தகவலின்படி, நக்சல்கள் பொதுமக்கள் போல் உடையணிந்து டவர் இருக்கும் இடத்தில் நுழைந்து, அதன் அடிப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த உபகரணங்களை தீயிட்டுக் கொளுத்தியுள்ளனர். திங்கட்கிழமை காலை தகவல் கிடைத்ததும், காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர்.
மேலும் இதுகுறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. வளர்ச்சி மற்றும் நலப்பணிகளுக்கு எதிராக விரக்தியில் நக்சல்கள் இந்த செயலை செய்துள்ளனர் என்று அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.