சத்தீஸ்கரில், பாதுகாப்புப் படையினருடனான துப்பாக்கிச் சண்டையில் 2 நக்சல்கள் சுட்டுக்கொல்லப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிஜப்பூர் மாவட்டத்தில், மாவட்ட ரிசர்வ் காவல் படை உள்ளிட்ட பாதுகாப்புப் படைகள் இணைந்து இன்று (ஜன. 29) காலை 7 மணி முதல் நக்சல்களுக்கு எதிரான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.
இதையடுத்து, அங்குள்ள வனப்பகுதியில் பதுங்கியிருந்த நக்சல்களுக்கும் பாதுகாப்புப் படையினருக்கும் இடையே கடும் துப்பாக்கிச் சண்டை நடைபெற்றதாகக் கூறப்படுகிறது.
இந்த நிலையில், இந்தத் தாக்குதலில் கொல்லப்பட்ட 2 நக்சல்களின் உடல்கள் அப்பகுதியில் கண்டெடுக்கப்பட்டதாகவும், அவர்களிடம் இருந்து ஏகே 47 ரக துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஆனால், இந்தச் சம்பவம் மற்றும் கொல்லப்பட்ட நக்சல்கள் குறித்த விவரங்கள் இதுவரை வெளியிடப்படவில்லை.
மேலும், பிஜப்பூரில் சாலையின் நடுவே அரசுப் படைகளைக் குறிவைத்து நக்சல்கள் பொருத்தியிருந்த 20 முதல் 30 கிலோ எடையுள்ள 2 ஐ.ஈ.டி. எனப்படும் வெடிகுண்டுகளைக் கண்டுபிடித்த பாதுகாப்புப் படையினர் அதனைச் செயலிழக்கச் செய்துள்ளனர்.
முன்னதாக, வரும் மார்ச் மாதத்தின் இறுதிக்குள் நாட்டிலுள்ள நக்சல்கள் அனைவரும் அழிக்கப்படுவார்கள் என மத்திய அரசு அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.