விரைவாக தீர்ப்பளித்ததால் பணியிடை நீக்கமா? உச்ச நீதிமன்றத்தை நாடிய நீதிபதி 
இந்தியா

விவசாயம் செய்ய 90 நாள்கள் பரோல் பெற்ற கொலை குற்றவாளி!!

கொலை குற்றவாளிக்கு விவசாயம் செய்ய 90 நாள்கள் பரோல் வழங்கியது பற்றி..

DIN

விவசாயம் செய்வதற்காக குற்றம் நிரூபிக்கப்பட்ட கைதிக்கு90 நாள்கள் பரோல் வழங்கியுள்ளது கர்நாடக உயர்நீதிமன்றம்.

2014ஆம் ஆண்டில் நடைபெற்ற கொலை வழக்கில் சந்திரா என்பவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இவர் குற்றவாளியாக நிரூபிக்கப்பட்டு 2018ஆம் ஆண்டு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.

இந்த நிலையில், கடந்த 11 ஆண்டுகளாக சிறையில் உள்ள சந்திரா, பரோல் கேட்டு பெங்களூரு மத்திய சிறைக் கண்காணிப்பாளரிடம் மனு அளித்திருந்தார்.

அந்த மனுவில், ராமநகரா மாவட்டம் கனகபுரா தாலுகாவில் உள்ள சித்ததேவரஹள்ளி கிராமத்தில் தனது தந்தையின் பெயரில் உள்ள நிலத்தில் விவசாயப் பணிகளை மேற்பார்வையிட வீட்டில் ஆண்கள் யாரும் இல்லாததால் தனக்கு பரோல் அளிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்திருந்தார்.

கடந்த செப்டம்பர் மாதம் அளிக்கப்பட்ட மனுவை சிறைக் கண்காணிப்பாளர் நிராகரித்த நிலையில், உயர்நீதிமன்றத்தை சந்திரா நாடினார். அந்த மனுவை ஏற்றுக் கொண்ட நீதிபதி ஹேமந்த் சந்தனகவுடர் விசாரணை நடத்தினர்.

விசாரணையின் முடிவில் தீர்ப்பு வழங்கிய நீதிபதி, மனுதாரர் கடந்த 11 ஆண்டுகளாக சிறையில் உள்ளார், அவருக்கு இதற்கு முன்னதாக பரோல் அளிக்கப்பட்டதில்லை. ஆகையால் அவருக்கு 90 நாள்கள் பரோல் வழங்கப்படுவதாக தெரிவித்தார்.

மேலும், பரோல் காலத்தில் எவ்வித குற்றச் செயல்களிலும் ஈடுபடக் கூடாது என்றும், வாரத்தின் முதல் நாள் காவல் நிலையத்தில் கையெழுத்திட வேண்டும், இந்த கட்டுப்பாடுகளை மீறினால் உடனடியாக பரோல் ரத்து செய்யப்படும் என்று உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பெண் அதிகாரியுடன் வாக்குவாதம்? உதவி ஆணையர் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம்!

ஐபோன் 17 எதிர்பார்ப்புகளைப் பூர்த்தி செய்யுமா? புது அம்சங்களாக என்னென்ன எதிர்பார்க்கலாம்?

நடிகர் குரியகோஸ் ரங்கா காலமானார்!

வெள்ள நீரை மக்கள் சேமிக்கலாமே.. யோசனை சொல்லும் பாகிஸ்தான் அமைச்சர்!

ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் முன்னதாக பங்குச் சந்தை சரிவுடன் நிறைவு!

SCROLL FOR NEXT