தொண்டு நிறுவனத்துக்கு இயக்குநரான சாரா டெண்டுல்கர்!
சச்சின் டெண்டுல்கரின் தொண்டு நிறுவனத்துக்கு அவரது மகள் சாரா டெண்டுல்கர் இயக்குநராக பொறுப்பேற்றுள்ளார்.
இந்தியாவின் லெஜெண்டரி கிரிக்கெட்டர் சச்சின் டெண்டுல்கர் சர்வதேச கிரிக்கெட்டில் 100 சதங்கள் விளாசியுள்ளார். டெஸ்ட்டில் 15, 921 ரன்களும் ஒருநாள் போட்டிகளில் 18, 426 ரன்களும் குவித்து உலக சாதனை படைத்துள்ளார்.
51 வயதாகும் சச்சின் டெண்டுல்கருக்கு சாரா டெண்டுல்கர் (27) , அர்ஜுன் டெண்டுல்கர் (25) இருக்கிறார்கள்.
மகன் அர்ஜுன் மும்பை இந்தியன்ஸ் அணியில் விளையாடுகிறார். மகள் சாரா டெண்டுல்கர் லண்டனில் முதுகலைப் பட்டம் முடித்துள்ளார். இன்ஸ்டாவில் 7.1 மில்லியன் (71 லட்சம்) ஃபாலோயர்களைப் பெற்றுள்ளார்.
Advertisement
Advertisement
விரைவில் நடிகையாக நடிப்பாரென பலரும் எதிர்பார்த்திருக்கும் வேளையில் அவர் சச்சின் டெண்டுல்கர் தொண்டு நிறுவனத்தின் இயக்குநராக பொறுப்பேற்றுள்ளார்.
செப்.2019 முதல் சச்சின் டெண்டுல்கர் அறக்கட்டளை (எஸ்டிஎஃப்) இயங்கிவருகிறது. இந்த நிறுவனம் குறைபாடுள்ள குழந்தைகளுக்கு உதவி வருகிறது.
இந்த நிலையில் சச்சின் தனது எக்ஸ் பக்கத்தில் கூறியதாவது:
எனது மகள் சாரா டெண்டுல்கர் எஸ்டிஎஃப்பின் இயக்குநராக சேர்ந்ததில் மிக்க மகிழ்ச்சியடைகிறேன். சாரா, லண்டனில் உள்ள பல்கலை. கல்லூரியில் மருத்துவ, பொது சுகாதார ஊட்டச்சத்து துறையில் முதுகலை பட்டம் முடித்துள்ளார்.
இந்தப் பயணத்தை தொடங்குவதன் மூலம் குழந்தைகளின் முன்னேற்றதுக்கு உதவும் வகையில் கல்வி, விளையாட்டு, உடல் நலத்துக்கு சேவை செய்வதால் உலகளாவிய கற்றல் முழுமையடையும் என்றார்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.