கோப்புப்படம். 
இந்தியா

லக்னௌவில் 3 முக்கிய நிலையங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்!

லக்னௌவில் 3 முக்கிய பயணிகள் நிலையங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

DIN

லக்னௌவில் 3 முக்கிய பயணிகள் நிலையங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரப் பிரதேச மாநிலத்தில் ஞாயிற்றுக்கிழமை காலை அவசர சேவை எண்ணை தொடர்புகொண்ட மர்மநபர், ஹுசைன்கஞ்ச் மெட்ரோ நிலையம், சார்பக் ரயில் நிலையம் மற்றும் அலம்பாக் பேருந்து நிலையம் ஆகிய இடங்களில் வெடிகுண்டுகள் வைத்திப்பதாகக் கூறி மிரட்டல் விடுத்து அழைப்பை துண்டிவிட்டார்.

உடனே போலீஸார் மற்றும் பாதுகாப்புப் படையினர் உஷார்படுத்தப்பட்டு வெடிகுண்டு செயலிழக்கும் நிபுணர்கள் மற்றும் மோப்ப நாய்கள் குழுக்கள் குறிப்பிட்ட இடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டன. வெடிகுண்டு செயலிழக்கும் நிபுணர்களுடன் இணைந்து போலீஸ் குழுக்களும் குறிப்பிட்ட நிலையங்களில் முழுமையான சோதனை நடத்தினர்.

அடுத்த 3 மணிநேரத்துக்கு 6 மாவட்டங்களில் மழை!

ஆனால் எந்த இடத்திலும் சந்தேகத்திற்கிடமான பொருட்கள் அல்லது வெடிபொருட்கள் எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை. மேலும் பொதுமக்களின் பாதுகாப்பிற்கும் எந்த அச்சுறுத்தலும் இல்லை என்பது உறுதியளிக்கப்பட்டது. வெடிகுண்டு மிரட்டல் வெறும் புரளி என தெரியவந்தது என்று கூடுதல் துணை ஆணையர் மனிஷா சிங் தெரிவித்தார்.

மிரட்டல் அழைப்பு வந்த தொலைபேசி எண்ணை போலீஸார் கண்காணித்து வருவதாகவும், சம்மந்தப்பட்ட நபரை கைது செய்வதற்கான முயற்சிகள் நடந்து வருவதாகவும் அந்த அதிகாரி மேலும் கூறினார். இந்த சம்பவத்தால் முக்கிய நிலையங்களில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கோட்டை 7 முக்தி அளிக்கும் சக்தி பீடங்கள்...!

சென்னிமலை முருகனுக்கு பாலாபிஷேக பெரு விழா

அதிக லாபத்துடன் இயங்கும் சுப்ரமணிய சிவா கூட்டுறவு சா்க்கரை ஆலை

ஒகேனக்கல்லில் ஆடிப் பெருக்கு விழா: ரூ. 1.07 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவி அமைச்சா் வழங்கினாா்

‘எண்ணும் எழுத்தும்’ திட்டம்: கண்காணிப்பு அதிகாரிகளுக்கு பள்ளிக் கல்வித் துறை உத்தரவு

SCROLL FOR NEXT