கட்சி நிகழ்ச்சியில் பங்கேற்ற தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் ANI
இந்தியா

தேர்தல் முறைகளில் மாற்றம் வேண்டும்: சரத் பவார்

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மீது நம்பிக்கை இல்லை என்றார் சரத் பவார்.

DIN

நாட்டில் தேர்தல் முறைகளில் மாற்றம் வேண்டும் என்றும் தற்போதுள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மீது நம்பிக்கை இல்லை எனவும் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் இன்று (டிச. 8) தெரிவித்தார்.

வளர்ந்த நாடுகளாக கருதப்படும் அமெரிக்கா, பிரிட்டன் போன்ற நாடுகள் கூட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களைப் புறக்கணித்து, வாக்குச்சீட்டு முறையைக் கடைபிடித்து வருகின்றன எனக் குறிப்பிட்டார்.

மகாராஷ்டிர மாநிலம் சோலாப்பூர் மாவட்டத்தில் உள்ள மர்காவாடி பகுதியில் பேசிய சரத் பவார்,

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களின் முடிவுகள் குறித்து மக்களுக்கு சந்தேகங்கள் எழுந்துள்ளன. பொதுமக்களுக்கு சந்தேகம் ஏற்படுத்தும் வகையிலேயே அதன் முடிவுகள் உள்ளன. மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் எங்கோ தவறு நடக்கிறது என்ற எண்ணம் ஏராளமான மக்களிடையே எழுந்துள்ளது. உலக நாடுகள் அனைத்தும் வாக்குச்சீட்டு முறையை கடைபிடித்துவரும் நிலையில், இந்தியாவில் மட்டும் ஏன் முடியாது? தேர்தல் முறைகளில் மாற்றங்களைக் கொண்டுவர வேண்டும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சென்செக்ஸ், நிஃப்டி சரிவுடன் நிறைவு!

அதிமுக முன்னாள் எம்எல்ஏ கொலை வழக்கு: பவாரியா கொள்ளையர்கள் 3 பேர் குற்றவாளிகள் எனத் தீர்ப்பு

6 ஓவர்களில் 5 விக்கெட்டுகள்; பென் ஸ்டோக்ஸ் அபார பந்துவீச்சு!

மணிப்பூரில் தொடரும் டெங்கு பரவல்! 5,166 பாதிப்புகள் உறுதி!

ஜார்க்கண்டில் பாம்பு விஷம் கடத்திய கும்பல் பிடிபட்டது: ரூ.80 கோடி விஷம் பறிமுதல்

SCROLL FOR NEXT