மும்பையில் மின்சார பேருந்து ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடி நடைபாதையில் ஏறியதில் 7 பேர் பலியாகியுள்ளனர். 42 பேர் காயமடைந்தனர்.
மும்பையில் மின்சார பேருந்து நடைபாதையில் இருந்தவர்கள் மீது மோதியதில் பலியானவர்களின் எண்ணிக்கை 7 ஆக அதிகரித்துள்ளது. திங்கள்கிழமை இரவு இந்த விபத்து நேரிட்டுள்ளது.
நடைபாதையில் இருந்தவர்கள் மீதும், வாகனத்தில் சென்றுகொண்டிருந்தவர்கள் மீதும் பேருந்து மோதியதில் காயமடைந்தவர்கள் பல்வேறு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மின்சாரப் பேருந்து அந்தேரி நோக்கிச் சென்று கொண்டிருந்தபோது, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சுமார் 100 மீட்டர் தொலைவுக்கு தாறுமாறாக ஓடியதில் 30 - 40 வாகனங்கள் மீது மோதியது. பிறகு, ஒரு கட்டடத்தின் சுற்றுச்சுவர் மீது மோதி நின்றது.
பேருந்து, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து திடீரென ஆக்ஸிலேட்டர் அழுந்தி சிக்கியதால் இந்த விபத்து நேரிட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது. பேருந்தின் ஓட்டுநர் விசாரணைக்காக கைது செய்யப்பட்டிருக்கிறார். சம்பவ இடத்திலேயே மூன்று பேர் பலியாகினர். செவ்வாய்க்கிழமை அதிகாலை பலி எண்ணிக்கை ஆறு ஆன நிலையில், சிகிச்சை பெற்று வந்த மேலும் ஒருவர் பலியானதால் மொத்த பலி எண்ணிக்கை 7 ஆக அதிகரித்திருக்கிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.