சத்தீஸ்கரில் மேலும் 2 நக்சல்கள் சுட்டுக்கொலை
சத்தீஸ்கரில் பாதுகாப்புப் படையினருடன் நடந்த என்கவுன்டரில் மேலும் இரண்டு நக்சலைட்டுகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
சத்தீஸ்கரில் பாதுகாப்புப் படையினருடன் நடந்த என்கவுன்டரில் மேலும் இரண்டு நக்சலைட்டுகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
சத்தீஸ்கர் மாநிலம், பிஜப்பூர் மாவட்டத்தில் நேந்திரா மற்றும் புன்னூர் கிராமங்களின் வனப்பகுதியில் பாதுகாப்புப்படையினர் நக்சல் எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
அப்போது நடந்த என்கவுன்டரில் 2 நக்சல்கள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
Advertisement
மேலும் ஒரு ரைபிள் மற்றும் நக்சல்கள் தொடர்பான பிற பொருட்களும் சம்பவ இடத்திலிருந்து மீட்கப்பட்டன. அப்பகுதியில் தேடுதல் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
இந்திய ரிசர்வ் வங்கிக்கு மீண்டும் வெடிகுண்டு மிரட்டல்!
இச்சம்பவம் காரணமாக அங்கு பரபரப்பு நிலவுகிறது.
முன்னதாக வியாழக்கிழமை, நாராயண்பூர் மாவட்டத்தின் தெற்கு அபுஜ்மத் பகுதியில் பாதுகாப்புப் படையினருடன் நடந்த என்கவுன்டரில் 7 நக்சல்கள் கொல்லப்பட்டனர்.
இத்துடன், பிஜாப்பூர் உட்பட ஏழு மாவட்டங்களை உள்ளடக்கிய சத்தீஸ்கரின் பஸ்தர் மண்டலத்தில் நடந்த தனித்தனி என்கவுன்டர்களில் மட்டும் இந்த ஆண்டு இதுவரை 217 நக்சல்களின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன என்று போலீசார் தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.