பிரியங்கா ANI
இந்தியா

நாடாளுமன்ற விதிமுறைகளுக்கு எதிரான வாா்த்தையா அதானி? பிரியங்கா

நாடாளுமன்ற விதிமுறைகளுக்கு எதிரான வாா்த்தையா அதானி என்று பிரியங்கா காந்தி கேள்வி..

Din

அதானி என்பது நாடாளுமன்ற விதிமுறைகளுக்கு எதிரான வாா்த்தையா என்று காங்கிரஸ் எம்.பி. பிரியங்கா காந்தி சனிக்கிழமை கேள்வி எழுப்பினாா்.

கேரள மாநிலம் வயநாடு தொகுதி எம்.பி.யான பின்னா், கடந்த வெள்ளிக்கிழமை மக்களவையில் முதல்முறையாக பிரியங்கா காந்தி உரையாற்றினாா்.

தில்லியில் அவா் செய்தியாளா்களிடம் சனிக்கிழமை கூறுகையில், ‘மக்களவையில் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி ஆற்றிய உரையை விமா்சிப்பதே பாஜகவின் வேலை. உண்மையான பிரச்னைகள் குறித்து பேச அக்கட்சியினருக்கு விருப்பமில்லை.

மக்களவையில் நான் ஆற்றிய உரையில் அதானி என்ற வாா்த்தை அவைக் குறிப்பில் இருந்து நீக்கப்பட்டுள்ளது. அதானி என்பது நாடாளுமன்ற விதிமுறைகளுக்கு எதிரான வாா்த்தையா’ என்று கேள்வி எழுப்பினாா்.

தமிழகத்தில் நாளைமுதல் எஸ்ஐஆர் பணிகள் புறக்கணிப்பு! வருவாய்த் துறை சங்கம் அறிவிப்பு!

பைசன் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு

பிகாரில் பாஜகவுக்கு எதிராக போராட்டம் வெடித்ததா? உண்மை என்ன?

புத்தகப்பையை சுமந்துகொண்டு 100 முறை தோப்புக்கரணம்: பள்ளி மாணவி பலி

செளதி அரேபியாவில் பேருந்து விபத்து: 42 இந்தியர்கள் பலி!

SCROLL FOR NEXT